பூஜைக்கு வந்த மலரே

அழகிய பெறுமலர் ஒன்று கண்டேன்
கண்பரிக்கும் எழில் அதில் கண்டேன்
எனோ அதில் இறைவன் வாசம் ஏதும் தரவில்லையே
அத்தனை அழகிருந்தும் அது பூஜைக்கேற்ற மலரில்லையே
பெண்ணே ஓ பெண்ணே உன்னையே நினைத்து
உனக்காகவே காத்து கிடைக்கும் என்னை நீ
உன் கடைக்கண் கொண்டு நோக்காமல் இருப்பதேனோ
நீயும் அந்த பெறுமலர்போல் ,வாசமில்லா அம்மலர்போல்
இருந்திட ஆசைகொண்டவளா தெரியலையே
அழகிருந்தும் இதயமில்லா கன்னியாய் இருந்திடவா
நீ விரும்புகிறாயா சொல், பெண்ணே சொல்
இல்லை கனிந்துவந்து உன் தாமரைக்கண் திறந்து,
உன் கரு விழியால் என்னை பார்த்து புன்னகை
சிந்திடுவாய் பெண்ணே உன் பேரழகிற்கு
நல்ல இதயமும் உண்டு என்று காட்டிடுவாய்
நீ வாசமுள்ள செந்தாமரை என்று காட்டிவிட்டு
பூஜைக்கு வந்த மலராய் என்னிடம் வந்துவிடு
ஓ பெண்ணே , ஓ பெண்ணே ..


i

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (28-Aug-17, 12:12 pm)
பார்வை : 89

மேலே