நினைவெல்லாம் நீயே
நினைவெல்லாம் உன்முகமே வந்து செல்லும்
..... நின்னைநான் காணவே உள்ளம் துள்ளும்
உனைக்கையில் ஏந்தவே கைகள் விஞ்சும்
..... உனைக்கையில் ஏந்தியே நெஞ்சம் கொஞ்சும்
புனைந்துவைத்தேன் அழகான கவிதை ஒன்றை
..... பொன்பாவை உன்னையே கருவாய் கொண்டு
நினைத்திருப்பேன் எந்நாளும் நானும் உன்னை
..... நீங்காமல் என்னுடன் இருப்பாய் அன்பே
ஆக்கம்:- வேல்பாண்டியன் கோபால்