டியர் டெட்டி
டியர் டெட்டி ,
உன் உருண்டை கருவிழிகள் மீது எனக்கு
அவ்ளோ காதல்!
பிய்த்து எடுத்து விடலாம் என்று தோன்றும் சில சமயம்!
உனக்கு தெரியாது
நீ மட்டும் தான் அருகில்
இல்லா நொடி தனிமை வலியை பரவ விடுகிறாய்
நீ என்னோடு இல்லாமல் பிறரோடு
நட்பாய் அவர்களை மகிழ்விக்கும் போது
பொறாமையின் நிழலை பரவ விடுகிறாய்
நீ என் கரங்களில் தவழும் நொடிகளில்
என் வடுக்களும் வழிகளும் நொடிப்பொழுதினில்
அகல்வதை நீ உணர்ந்து இருக்க வாய்ப்பு இல்லை
என்னோடு என்றும் இரு
இந்த உலகம்
வலிகளையும் ஏமாற்ற்றத்தை மட்டும்
எனக்கு மிகுதியாய் பரிசாய் தருகின்றது
உறவுகளால் நட்பாய் போலியாய் வஞ்சனையாய்
என் உயிர் டெட்டி என்னோடு இரு
நான் மரணிக்கும் தருணம் வரை!!
#அஜித்