நாட்டு நடப்பு
நிலையில்லா விலைவாசி நிலைத்திருக்கும் இந்நாட்டில்
விலையில்லா வீன் பொருளும்
குவிந்திருக்கு என் வீட்டில்
மாற்றில்லா கட்சிகளே
மாறி மாறி ஆண்டதினால்
சுவாசக்காற்றில்லா காரணத்தால்
குழந்தைகளும் மாண்டனவே
நீரில்லா விவசாயம்
செழிப்பதுவும் சாத்தியமோ
வேரில்லா மரங்களென
வீழ்வதுதான் பாத்திரமோ
கதவில்லா வீட்டினலலே
கண்டவனும் நுழைகின்றான்
தலையில்லா முண்டமென
தவிக்கிறது தமிழகம் தான்
ஆனந்த் பச்சை தமிழன்