இது தான் காதலோ

என் மனதினில் நீ இருப்பதை தான் அறிவதோ காதல்
என் மூச்சினில் நீ வருவதை தான் உணர்வதோ காதல்
கண் பார்வையில் நீ படுவதை தான் ஈர்ப்பதோ காதல்
விண் காற்றினில் நீ தெரிவதை தான் பார்ப்பதோ காதல்

விதி இருந்தால் உன்னோடு
விலை பேசும் கண்ணோடு
விளையாடும் பேரழகே
வினை என்ன செய்திடுமோ

இரவு நேரம் மட்டும்
இணையை பார்க்கும் ஊடல்
பகலில் கூட தேடினால்
அதன் பெயர்தான் காதல்.

காற்றில் சேர பார்க்கும்
சுவாசம் தோடு பேசும்
இதயம் வெறுத்தும் கூட
போக மறுக்கும் காதல்

விழிகள் பார்க்கும் கோணம்
மூன்று மடங்கு நீளும்
ஏங்கி ஏங்கி கண்கள்
எட்டு திசையும் ஆளும்

காற்றில் பூக்கும் பூக்கள்
கண்களாகி போகும்
கண் இமையின் தூக்கம்
பெண்ணே உன்னால் எங்கும்

என் மனதினில் நீ இருப்பதை தான் அறிவதோ காதல்
என் மூச்சினில் நீ வருவதை தான் உணர்வதோ காதல்
கண் பார்வையில் நீ படுவதை தான் ஈர்ப்பதோ காதல்
விண் காற்றினில் நீ தெரிவதை தான் பார்ப்பதோ காதல்

எழுதியவர் : விஜய் பாரதி (29-Aug-17, 4:56 pm)
Tanglish : ithu thaan kathalo
பார்வை : 133

மேலே