விலாசம் தேடி
உன்னிடம் கேட்காத விலாசத்தை
ஊரெல்லாம் தேடிகொண்டிருக்றேன்
உன்னோடு சொல்லாத சொல்லினை
என்னோடு உளறி கொண்டிருக்கிறேன்
முள்ளோடு பூவுண்டு என்றாலும்
முழுதாக மனமேற்று கொள்ளாமல்
மணம் சுவாசம் வாழ்வென்று உணராமல்
மரணம்தான் முடிவாகி விடுமுன்னே
உண்மையின் சிலவார்த்தை உணர்ந்துதான்
உன் ஆசை பொய்களை களைந்துதான்
நல்லவன் கெட்டவன் நல்லவனாய்
நலமோடு நானிருக்க வாழ்த்திதான்
சில புரிதல் செய்தால் அது போதுமே
சீக்கிரம் அது நடக்க வேண்டுமே
என்னோடு முகவரியில் எழுதுகிறேன்
இதுதான் நம்பிக்கையின் இரகசியம்