மரம்போல் வாழ்
உன்னை இருள் சூழ்ந்தால்,
நீ புதைக்க படவில்லை...
விதைக்க பட்டிருக்கிறாய்
என்று கொள்...
முளைத்து வா!
மரமாகு!
நிழல் கொடு!
இலைகள் உதிர்!
மக்கி் உரமாகு!
மரம்போல் வாழ்!!
தலை நிமிர தகுதியானவனே
உன்னை பார்க்க முடியும்...
வேர்கள் அடக்கிக்கொள்
பிறர் தடுமாறாமல்...
மரம்போல் வாழ்!!!
மாமனிதராய் மடிவாய்!!!