கேட்பாயோ என் சொல்லை

#கேட்பாயோ என் சொல்லை?...

உடலை பெற்றெடுத்த பெற்றோர் கடனை அடைக்க அவளிடம் வரதட்சணைக்கு விற்றுவிட்டு அவளை அடிமையென்றான் விழிகளாகிய அவளை மறந்து...

மறதியின் தண்டனையாய் இல்லறவாழ்வில் என்றும் வேதனை...
ஏனிந்த சோதனை?
கேட்பாயோ என் போதனை?

தாயே உயர்வென்று காலில் விழுந்து கிடந்தவன், காலப்போக்கில் தாயை மதிக்கத் தவறினால்,
கிடைத்திடுமா தெய்வத்தின் அருள்?

தலைவலிக்கும் நேரம்... தைலம் தேய்த்துவிடக்கூட ஆளில்லாத நேரம்...
கதறி அழுது பயனில்லை...
பாதுகாப்பான தாய் மடி திரும்ப கிடைக்கவும் வழியில்லை...
இந்த உடலை துறக்கும் வரை தானே இந்த இன்ப, துன்பத்தொல்லை...
நிலை மாறும் உலகில் எதுவும் நிரந்தரமில்லை...

அன்பைச் சொல்ல வார்த்தை இல்லை...
அதை புரிந்து கொண்ட ஆளும் இல்லை...
தனிமை தான் பாதுகாப்பு எல்லை...
அத்தனிமையைத் தாண்டாவிடில் இனிமை இல்லை...
நாளும் நண்பர்கள் தருவார்கள் அன்புத் தொல்லை...
அதை விவரித்தால் இக்கவிக்கு எல்லையே இல்லை...

சிரித்து ரசித்திடு நாளும் விளக்கிய பல்லை...
மரணமே எல்லையான இவ்வுடல வாழ்வில் துன்பங்கள் என்பதே என்றும் உனக்கில்லை...
மனதைக் கொன்று மனம் மகிழ்ந்தால் என்றும் நிம்மதி இல்லை...
கேட்டுக் கொள்வாயோ என் சொல்லை?...

எழுதியவர் : அன்புடன் மித்திரன் (30-Aug-17, 12:09 am)
பார்வை : 908

மேலே