தொல்காப்பியன்

எல்லா தானமும்
வழங்கியாகிவிட்டது
ஒன்று மட்டும்
உச்சமாய்
என்னிடத்தில்.

பெற்றுக்கொள்ள
யார் தகுதியுடையீர்
என்ற வார்த்தை
ஒலி வெள்ளமாக
வழிந்தோடியது.

யாம் தகுதியுடைவன்
என்றான் அதை
பெறுதலுக்குரியவன்
தானம் எனக்கான
ஒன்றுறேன்றான்.

உம்மிடத்தில் உள்ள
தானம் மகத்துவம்
யாது என்றான் என்னை வாண் புகழ் செய்யுமோ
என்றுரைத்தான்.

எல்லாமாகிய இறையருள் அதை சொல்லால்
வடிக்க பைந்தமிழ்
இப்புகழுக்கு இணை
யாதுமில்லை.

நீர் யார்? தமிழ் மொழி ஈன்றெடுத்த தொல்காப்பியன்
கும்பமுனி தமிழ்க்கொண்டு
உயிர் கொடுத்தார்
இப்பிண்டத்திற்கு.

தமிழ்மொழி தானமாய் பேற
உமக்கேன்னா தகுதி?
விதை வைத்தவன் பின்பு
வளம் செய்தவன் அறுவடைக்கு
வந்தோம்.

சேயோன் கைப்பற்றி
கண்ணீர் கரைபுரண்டு
பாதத்தில் தலை சாய்ந்து
வற்றாத தமிழ் தந்து
என்னை உயர்வித்தாய்.

வாழ்க தமிழ் என்று
வரியோடு பிரிந்தது
அவனது உயிர் .

எழுதியவர் : சூர்யா...மா (30-Aug-17, 11:31 am)
பார்வை : 298

மேலே