என் கவிதையின் சொற்களில் நீ

எனக்கெனவே நீ காத்திருப்பாய் !
உனக்கெனவே நான் பூத்திருக்கிறேன் !
எனக்கெனவே உன் காதலும் இருக்கிறது !
உனக்கெனவே என் காதலும் இருக்கிறது !
என் பார்வையின் தேடல் உன் முகம் மட்டும் காணவே !
என் இதயத்தின் தேடல் உன் நினைவு பற்றியது மட்டுமே !
என் கவிதையின் சொற்களில் நீ மட்டுமே சுகமாய்
என்னை நனைக்கிறாய் !