கேட்காத வரம்
பணி தேடி பயணிக்கிறேன்.
பார்த்து போ என்றாள்
அம்மா,
பார்த்து வா என்றார்,
வழியனுப்ப வரும் அப்பா.
நான்,
தடுக்கி தடுமாறும்
வரை புரியவில்லை
அவர்கள் சொன்னதின் அர்த்தங்கள்,
வார்த்தைகளிலும் வாழ்க்கையிலும்
தடுமாறிய நான்,
விழவும் இல்லை,
அருகில் என் நண்பன்...
இந்த வரம் போதும்
இறைவனுக்கு நன்றி.
இப்படிக்கு
நான்...!்