உன்னை காணாமல் இருந்திருக்கலாம் -4 தவிர்ப்புகளும் தவிப்புகளும்

நானும் நீயும்
தள்ளுதே தூரம்
நின் மனம்
கொள்ளுமா ஈரம்
என் வனம்
கொல்லுதே பாரம்
நம் மணம்
எப்போது சேரும்

என் ஆற்றாமையில்
சீறும் மவுனம்
அது தேற்றாமல்
அழும் தினம்

என் இதயத்தில்
சேரும் ஞானம்
அது இருந்தும்
மாற்றாமல் வாழும்
தன்னை

என் நினைவுகள்
உன்பின் வாலாக
உன் தவிர்ப்புகள்
கீறிய வாளாக

என் தவிப்புகள்
உன்னை மறந்திட மறுக்க
உன் வார்த்தைகள்
சிலநேரம் என்னை நறுக்க
நின் மேல் நேசம்கொண்ட
சிறுவனின் இதயம் கருக்க

விதியும் சாதியும்
நம் அன்பை நசுக்க
புத்தியும் புதிதும்
கலந்த உன்பேச்சு நறுக்க

இதயத்தின் எப்பக்கமும்
நுழையவிடாமல் நீ தடுக்க
இவ்வுலகின் எப்பொருளிலும்
நிலைகொள்ளாமல் நான் தவிக்க

சூழ்நிலையின் சாபங்கள்
என்னை நெருக்க
சூழ்ந்துகொண்ட தாபத்தோடு
நான் நொறுங்க
ஒட்டிக்கொண்ட தாடியோடும்
கட்டிக்கொண்ட நினைவுகளோடும்
நான் கிறங்க

ஈன்ற தாயின் வலியோடு
நான் எனக்குள் ஏங்க
உன்றன் காதல் குழந்தையோடு
நான் நமக்குள் தூங்க
என்று வருவாய் நீ
என்னை அன்பாய் நெருங்க
என்றும் கேட்டுவிடாதே
நீங்க யாருங்க
அன்று இருக்காதே அன்பே
இந்த உயிர் எங்கிட்ட ....!!!

எழுதியவர் : யாழினி வளன் (30-Aug-17, 8:58 pm)
பார்வை : 457

மேலே