இவள் பெண்
அடக்கம் அவசியம் தான் அடிமையாகி விடாதே,
நாணம் தேவை தான் நாளும் வேண்டாம்,
அச்சம் இருக்கட்டும் அனைத்திற்குமல்ல,
பொறுமை அழகுதான் போதுமான அளவிற்கு,
பெருமைப் பட்டுக் கொள்ளாதே பெண்ணாய் பிறந்தமைக்கு,
பெண்ணடிமைவாதிகள் முற்றிலும் ஒழியட்டும் பிறகு பார்த்துக் கொள்ளலாம்,
வாளேந்தும் பலமில்லை வாதாடி வென்றிடலாம்,
கடமையாற்ற சமூகத்தை களையருக்க வேண்டாமா???
வீணர்கள் சூழ்ந்திருக்க விவாதம் பலிக்காது,
விழிப்புடன் விரைவாய் விடியலை நோக்கி.