இனப்படுகொலையின் இறுதி நாள்

நிலவு அன்று நடக்கவிருந்த பயங்கரத்திலிருந்து தன்னை பாதுகாத்து கொள்ள முன்னெச்செரிக்கையாய் விடுப்பில் சென்றிருந்தது.
இருளை இருள் கொண்டு அடித்தது போல் மயான கும்மிருட்டு விளிம்பில்,
அந்த நிலம் குருதி தோய்ந்து உலர்ந்திருந்தது..
தொலைவிருந்து மிக அருகாமையை நோக்கி,
வேகமாய் பல காலடி சுவடுகள் நெருங்கி வருவதை உணராதவாறு,
குற்றுயிராய் தரையில் கிடத்த பட்டிருந்தேன்..

இச்சையின் கூடிய வெறி கொண்ட மனித பெயர் கொண்ட மிருகங்கள்,
தன் உடலெனும் ஆயுதத்தால் பெண்மையின் மேடு பள்ளங்களை சிதைத்து விட்ட துர்நாற்றம் அவர்களின் வியர்வை வழியாக காற்றோடு கலந்திருந்தது.
நிசப்தத்தை முழுங்கி ஏப்பமிட்டவாறே,
பெரும் சப்தம் கொண்டு மர்ம உறுப்புகளை அருத்தெறிந்து ஆசுவாசப்படுத்தி கொண்டனர்.

தன்னுள் புதைத்து வைத்திருந்த இன வெறியினை,
பிணைக்கப்பட்ட இரும்பு சங்கிலியிலிருந்து உயிருள்ள ஆத்மா ஒவ்வொன்றும் விடுதலையை பெற்றிட கடுமையாய் உடலோடு போராடி கொண்டிருந்தது.
தரதரவென்று நிர்வாண உடல்கள் தறிகெட்டு பல பாகங்களாய் சிதறி கிடந்தது..
பாதி உடல்கள் பாதாள சாக்கடையிலும்,
மீதி உடல்கள் பாயும் வாய்கால்களிலும் அடைக்கலமாய் குழுமி இருந்தன.
சில பிரேதங்களின் சதைகள் சிதையில் விழுந்து துடிதுடித்து கொண்டும்,
சில பிரேதங்கள் தங்களை அடையாளபடுத்தி கொள்ள அவமான பட்டு,முகம் தெரியாதவாறு சிதைவுற்று கிடந்தன..

நகர முடியாதவாறு நங்கூரமிடபட்டிருந்த என் உடலை கொண்டு,
என் சகோதரிகளை காப்பாற்ற முடியாமல் கதறி கொண்டிருந்தது மனசு..
அந்த யுத்தத்தின் இரவின் கடைசியில் தேடி பார்த்தேன்,
அங்கு யுத்தம் நடந்தற்கான சாத்தியகூறுகளின் சுவடுகள் முற்றிலும் துடைத்தெறிய பட்டிருந்தது..
ஆம் இனப்படுகொலைகள் யுத்தத்தின் வரம்புக்குள் வருவதில்லையே..

எழுதியவர் : சையது சேக் (31-Aug-17, 5:08 pm)
பார்வை : 173

மேலே