பர்மாவின் படுகொலைகள்

புத்தனாய் மாறிய சித்தார்தரின் போதி மரம்,
இப்போது கழுமரமாய் உருமாறி விட்டதோ..

புத்தனின் அகிம்சையின் வேர்கள்,
இன்று தண்ணீரை (அன்பை) விட,
மனித குருதியையே அதிகமாய் உறிஞ்சு கொண்டதோ..

ஆசையே துன்பத்திற்க்கு காரணம் என்று சொன்னாயே,
தன் ஆசையினால் பிறரை துன்பப்படுத்தாதே என சொல்ல மறந்து விட்டதோ..

போரை வெறுத்து வாளை தூக்கி எறிந்து துறவறம் சென்றாயே,
நீ தூக்கி எறிந்த வாளினை இன்று,
உதிரம் கொண்டு குளிப்பாட்டுவதால் வெறுத்து சென்றாயோ..

நீ வாழும் போது நெறியூட்டி விதைத்த விதைகளெல்லாம்,
இன்று காலமாற்றத்தால் விஷச்செடியாய் வளர்ந்து நின்றதோ..

மனித வதையை மிருகங்கள் செய்கிறதென்று மௌனம் கொண்டாயோ,
உன் மௌனத்தை சம்மதமாய் நினைத்து உயிரை கொன்றார்களோ.

பாலகனையும் தீயிலிடும் பாறை நெஞ்சங்களையும்,
கூர்வாளால் உடலை கூர் போடும் கொலைகார மிருகங்களையும்,
குற்றுயிராய் மாற்றிவிட உனக்கே உள்ளூர உள்ளம் குமுறுதோ..

நீ மீண்டும் பிறந்து வந்து இன்னல் பட்டால் புத்தனாகுவாயா,
உன் மீள்வருகை மீண்டுமொரு சித்தார்த்தர் ஆகுமோ..

எழுதியவர் : சையது சேக் (31-Aug-17, 5:01 pm)
பார்வை : 86

மேலே