பெண்மையை போற்றவேண்டுமேயன்றி பிணமாக்காதீர்அனைத்து வார்த்தைகளும் ப வரிசை எழுத்துக்களை கொண்டு தொடங்கும்படி எழுதப்பட்டது
படிக்கும் பொழுதில் பாடங்களே புரியாத
பக்கத்து பழக்கத்திற்கு போற்றுதலுக்குரிய
பெண்ணின் பழக்கம் புரிந்துவிடவா போகிறது?
பேசுவோர் பேசட்டும்...போகிற போக்கில்
பொசுங்கிப்போகும் பேப்பர் போலல்ல பெண்ணுடனான பழக்கம்.
பாவைமன பாசறையில் பாசத்திற்காக பூத்திருக்கும்
புன்னகை பொன்னோவியங்களுக்கும் புன்முறுவல்களுக்கும்
புத்துணர்வு பெறாத பையனையும் படைத்திருப்பானா படைத்தவன்??
பேசும்போதும் பார்க்கும்போதும் பாங்காய் படும்போதும்
பதறி பயப்படும்போதும் பற்றி புரிந்துகொள்ளும்போதும்
பின்னாலமர்ந்து பின்னலிடும்போதும்
பகுத்தறிவில்லா பன்றிக்கூட்ட புழுக்களும்
பகைமை பேய் படுத்தும் புறங்கூறும் பெட்டைகளும்
படுக்கையை பரிமாறிக்கொண்டதாகவே பல்லில் படாமல் பேசும்
பண்பற்ற போக்கிரிகளின் பேச்சுக்கள் படர்வது பொதுவானதே...
பெண்மையை போற்றி புரிந்துகொண்டால் புணர்வதும் போற்றுதலே.....
பேசுவோர் பேசட்டும்...போர்க்களத்தில் பிறந்தால் போரிடவேண்டும்,
போகட்டும் பாழான பிணத்திற்கொப்ப பதர்கள் பிழைத்தென......