நீங்காதே

யாரை கேட்டுத்தான் காதல்
நெஞ்சில் நுழையுதோ
ஊரே பார்க்கத்தான் காதல்
நெஞ்சை பிளக்குமோ

ஒருமுறை பார்க்கும் பெண்களினால் வரும்
துயரங்கள் தாங்கவில்லை
பலமுறை கேக்கும் ஆசையினால் வரும்
தடயங்கள் மறைவதில்லை

யாரை கேட்டுத்தான் காதல்
நெஞ்சில் நுழையுதோ
ஊரே பார்க்கத்தான் காதல்
நெஞ்சை பிளக்குமோ

அச்சு கிழண்ட ஒரு வண்டியை போல் நான்
ஆனேன் புரியவில்லை
காலையில் பூக்கும் பூக்களை வெறுத்தே
நடப்பதும் தெரியவில்லை

யாரை கேட்டுத்தான் காதல்
நெஞ்சில் நுழையுதோ
ஊரே பார்க்கத்தான் காதல்
நெஞ்சை பிளக்குமோ

இடி விழுந்த மரத்தின் ஓசை
காதில் விழுகிறதே
அடி மனதில் ஆசையின் தாகம்
அனலாய் எரிகிறதே

எழுதியவர் : விஜய் பாரதி (31-Aug-17, 5:10 pm)
பார்வை : 86

மேலே