தமிழ்
நீரிலிட்டு மூழ்காது
வென்றிட்ட சுத்தத்தமிழ்
நம்தமிழ் ஆனால் இன்று
பேசும் வார்த்தையில் கூட
பிறமொழியின் ஆதிக்கத்தால்
நம் மொழியின் மேன்மை
அழிவின் ஆழத்தில் !
தீயிலிட்டும் கருகாமல்
மேன்மையுடன் நின்றிட்ட
தொன்மைத் தமிழ்
நம்தமிழ் ஆனால்,இன்றோ
அந்நிய மொழியின் ஆதிக்கத்தால்
நம் கொச்சை பேச்சில் தீயிலிட்ட
புழுவாய் துடிக்கின்றது !....