துணையாவாய் வெற்றிக்கு

பல கனவுகள் இருகண்ணில்
ஒரே அழுகை நீதந்தாய்
நினைவுகள் மட்டுமே இப்போது
நீ தந்தது அன்று இன்றுமே

கனவுகள் மாறிய அழுகைக்கு
காரணம் தந்தது நீதானே
நினைவுகள் போகாது நெஞ்சினிலே
நீயின்றி மறக்காது என்னுள்ளம்

கண்ணீரை நீ மாற்றி கனவு தர
காத்திருக்கும் நினைவு மறக்கட்டும்
வருங்காலம் உனக்காக காத்திருந்து
வருகின்ற உன் கையால் துடைப்பாயா ?

எழுதியவர் : . ' .கவி (23-Jul-11, 12:13 pm)
சேர்த்தது : A.Rajthilak
பார்வை : 444

மேலே