கடமை தவறுவதில்லை

சோறு இல்லாம
சோர்ந்து படுத்ததுபோல
இமைகள் மூடாம
இரவும், பகலும் படிச்சு
உச்சம் தொட நினைச்சவ—உயிர
உயரம் தொட வச்சா

வயிறு பசிச்சா
வாய் திறந்து பேசியிருப்பா,
நிறைஞ்ச மார்க்கிருந்தும்
நினைச்சது நடக்கலேன்னு
மனசு பொறுக்காம
மாற்றுவழி தேடிக்கொண்டா

ஏழையோட உயர் படிப்பு
எடுபடாம போச்சே,
மார்க்குகள் அதிகம் பெற்றது
மரணத்தில் இடம் கிடைக்கவா?
உயிர் போனா உறவுகள் அழும்
உன் உயிருக்கு உலகமே அழுததம்மா!

தப்பிக்க எண்ணாமல்
தன் பணியை எல்லோரும்
சரிவர செய்திருந்தால்
சிறப்புகள் வந்து குவியாதோ!
என்னமோ, காலன் மட்டும்
எப்போதும் கடமை தவறுவதில்லை.

எழுதியவர் : கோ. கணபதி. (2-Sep-17, 1:29 pm)
பார்வை : 163

மேலே