அனிதாக்கள் கவனிக்கவும்

...................அனிதாக்கள் கவனிக்கவும்


அந்த நான்கெழுத்து உயர்ந்ததுதான்..
அதை விட
உம் பெயரின் ஒவ்வோரெழுத்தும்
உயர்ந்ததன்றோ...! ! !

எதிர்காலம் குறித்து
சிந்திக்கு முன்பு
எதிரிலிருக்கும்
பெற்றவரைச் சிந்திக்கலாகாதோ..??

அவரை நம்பி, இவரை நம்பி
அரசை நம்பி..
தன்னைத்தான் நம்பலாகாதோ?
தன்னம்பிக்கை தராத கல்வி என்ன கல்வியோ ??

காலமிருக்கிறது.. வாய்ப்புமிருக்கிறது..
கலங்காத மனம் வேண்டாமோ??

மருத்துவர்க்கும் சங்கடம் வரும்..
நான்கெழுத்துப் படித்தும்
நரகத்தில் இருப்பவர் பலர்..

கை கொடுப்பது படிப்பல்ல..!
தன்னம்பிக்கை, தைரியம்
விழிப்புணர்வு விடாமுயற்சி..
நான்கெழுத்தைப் பெற வைத்தது இவைதான்..
இவையில்லாத நான்கெழுத்து தலையெழுத்துதான்..! !
இவையிருந்தாலோ
எந்த எழுத்தும் நான்கெழுத்துதான்..!
சற்றே புரிந்து கொள்ளுங்கள்..!

எழுதியவர் : அருணை ஜெயசீலி (2-Sep-17, 12:00 pm)
பார்வை : 139

மேலே