முதுமையில் நான்

என்னை சுழல் போல்
சுழற்றி அடிக்கின்றது
இந்த முதுமை பருவம்....

முதலில் காதின் ஓரத்தில்
நரைக்க தொடங்கிய
தலைமுடி,
சில வருடங்களில்
தலை முழுவதும் ஆக்கரமிக்க,
கண்ணாடி பார்த்து தலை வாறும்
பழக்கத்தை விட்டேன்.....

ஓடி ஆடிய
கைகளும் கால்களும்
ஓய்ந்து போக,
வீட்டிற்குள் நடப்பதே
அரிதாய் போனது.....

விசிரியின் மடிப்பாய்
சுருங்கின தோல்கள்,
அந்த சுருக்கத்தின்
இடுக்கில் புதைந்து போனது
என் இளமையின் ஆட்டம்....

என் நிழலாய் வாழ்ந்தவள்
நான் கட்டிய தாலியோடு
பூவும் பொட்டுமாய்
என்னை முந்தி கொள்ள,
திக்கு தெரியாத காட்டில்
தொலைந்த குழந்தையாய் ஆனேன்...

நோயுண்டு படுக்கையில்
கிடந்த போதும்
என் நலனை மட்டுமே
பேணியவள்,
இறக்கும் தருவாயிலும்
அவளை பிரிந்து
நான் தனிமையில்
வாடும் நிலை பற்றியே
நினைத்து கண்ணீரில்
கரைந்து போனாள்....

என் கை பிடித்து நடக்க
கற்றுக் கொண்ட பிள்ளைகள்
அவர்களின் தோளுக்கு பதிலாய்
ஊன்று கோளை கொடுத்தனர்
நான் பிடித்து நடக்க,
அந்த ஊன்று கோளை
என் மனைவியின் கையாய்
நான் நினைத்துக்கொள்ள
ஒவ்வொரு முறையும்
நான் கோளை பற்றுகையில்
சுகமாய் இனித்தது
அவளின் நினைவுகள்....

இளமையை உழைப்பில் தொலைத்தேன்
முதுமையில் இன்பமாய் வாழ...
இளமையும் போனது
முதுமையில் தனிமையும் சூழ்ந்து..

துள்ளி திரிந்த காலங்களின்
எண்ணங்களோடும்
மனைவியின் காதலின்
நினைவுகலோடும் ஏக்கத்தோடு
காத்திருக்கிறேன்
அவளின் அழைப்பிற்காக....

எழுதியவர் : மதிமகள் சண்முகபிரியா (2-Sep-17, 11:58 am)
Tanglish : muthumayil naan
பார்வை : 1366

மேலே