மனதைப் பூட்டிய மௌனங்கள் அழகு

குத்திக் கிழிக்க
ஈட்டிகள் வருமெனில்
பாறையில் செய்த
இதயங்கள் அழகு !

புன்னகை புரிதல்
குற்றம் ஆகுமெனில்
இறுகிய முகத்தின்
தீவிரம் அழகு !

திறந்த மனதின்
அன்பு தவறெனில்
திரைகளில் ஒளிந்த
ஒப்பனை அழகு !

வார்த்தையின் அர்த்தம்
மாறிப்போகுமெனில்
மனதைப் பூட்டிய
மௌனங்கள் அழகு !

@இளவெண்மணியன்

எழுதியவர் : இளவெண்மணியன் (2-Sep-17, 11:39 am)
சேர்த்தது : இளவெண்மணியன்
பார்வை : 113

மேலே