என்னவள் முகம் ,கால்கள்

நீராடிவிட்டு என்னவள்
முற்றத்தில் வந்தமர்ந்து
ஒய்யாரமாய் தன் கார்குழலை
விரித்து கோதிவிட்டிருந்தாள்
அப்போது அங்கு ரீங்காரத்துடன்
இரு கருவண்டுகள் அவள்
முகத்தை சுற்றி சுற்றி
வந்ததன் காரணம் இப்போது
எனக்கு புரிந்தது -என்னவள்
சிவந்த முகத்தை வண்டு
தாமரை மலரென்று நினைத்து
கிட்ட கிட்ட வந்து போக
மூடி விரிந்த அவள்
கருவிழிகள் கண்டு சற்றே மருண்டன
இது என்ன' நாம் நாடி செல்லும்
தாமரைக்கு கண்கள் முளைத்தன
எப்போதென்றெண்ணி ..................

காற்றில் ஆற்றிய கூந்தலை
என்னவள் இப்போது கோதி
ஒய்யார கொண்டையாய்
வாரி முடித்தாள் -பின்னே
தாமிர குடம் ஒன்று
இடுப்பில் வைத்து
நதிக்கரை வந்தடைந்தாள்
சீலையை சற்றே வாரி
சொருகி இடுப்பில் கட்டி
லகுவாய் சொம்பில் நீர்
நிரப்பி நின்று குடத்தை
மீண்டும் இடுப்பில் அமர்த்த
அங்கு வந்த நாரைகள்
இவள் சிவந்த நீண்ட கால்கள் நோக்கி
வேகமாய் வந்தனவே
இது என்ன செங்கால்
நாரைகள் எங்கிருந்து
வந்தன பார்ப்போம் என்று நினைத்து !

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (2-Sep-17, 1:43 pm)
பார்வை : 84

மேலே