அனிதாவின் மரண சாசனம்

அனிதாவின் மரண சாசனம்

உன் பிணத்தின் மீதுதான் ,
இந்த
நீட் தேர்விற்கு எதிராக
நீதி கிடைக்குமென்றாய்
நீ தூக்கில் தொங்கினாய்
எங்கள் தமிழ் மகளே..
உன் மரணம் தற்கொலையல்ல ...
உன் மரணம் படுகொலை...
இந்த கொலைக்கு காரணம் ,
நாங்கள் தேர்ந்தெடுத்த
அறிவு இழந்த அரசாங்கமும் ,
கையாளாகாத முட்டாளாகிய
மாந்தர்கள் நாங்களும்தான்...
உன் கனவு காற்றில் கரையவில்லை ,
எங்கள் தமிழ் கண்மணியே...
நாங்கள் தருகிறோம் உனக்கு
டாக்டர் பட்டம்.,
அவன் என்ன தருவதற்கு ..
நீ உன் கனவை கல்லறையில்
புதைத்து விட்டாய்...
அதில் இருந்து
வளரும் புற்களாய்
உன் போன்ற மாணவர்களின்
கனவை நினைவாக்க
விதையாய்
நீ மண்ணில் புதைந்தாய்...
மதி கெட்ட அரசாங்கமே..
நீ எத்தனை தேர்வுகள்
வேண்டுமானாலும் கொண்டுவா ..
நாங்கள் எதற்கும்
சலித்தவர்கள் அல்ல...
ஆனால் ................................
முதலில் கல்வி தரத்தை உயர்த்து ...
நாடு முழுவதும்
ஓரே கல்வியை தா ...
பிறகு ,
நீங்கள்
எங்கள் தகுதியை
முடிவு செய்...
நெஞ்சு பொறுக்குதில்லையே அனிதா ...
உன் மரணம்
எங்கள் நெஞ்சை அரிக்கிறது..
காரணம் நாங்களயென்று...
அதிகாரமற்ற நாங்கள், இந்த
அரசிடம் அடங்கிபோய் விட்டோமோ ...
ஊடகமும் நாயின்
நன்றியை காட்டி
உன் சாதியை பேசுகிறதே, தவிர
நம் அரசாங்கத்தின்
கையாளாகாத நிலையை
பேச மறுத்து ,
உன் எழ்மையை கூறுகிறது ...
தகுதி இருந்தும் , உனக்கு
தகுதியற்றவர்களாலும்
எங்களாலும்
மரணத்தை மட்டுமே
பரிசாக கொடுக்கமுடிந்தது..
மன்னித்து விடு ..
நாட்டை பேய் ஆண்டால்
உயிரை கொன்று
பிணம்தான் தின்னும் ...
உன் மரணத்திற்கு
நாங்களே காரணம் ...
இனியொரு கல்லறையில்
கல்வி கனவு புதைக்கப்படக்கூடாது ...
இனி தொடங்கும்
உன் கல்லறையில் புரட்சிபோர்
உன் மரணம் பலரது
கனவுகளை நினைவாக்கும் ..
நீ எங்களால் புதைக்கபடவில்லை ..
இன்று முதல் விதைக்க படுகிறாய் ...
எம் மாணவ கண்மணிகளின்
வருங்கால நீதியாய் ...
எங்கள் தமிழ் மகள்
அனிதாவே ................
எங்களை மன்னித்துவிடு...


உன் சகோதரி
சுபா பிரபு

எழுதியவர் : (2-Sep-17, 3:00 pm)
சேர்த்தது : சுபா பிரபு
பார்வை : 116

மேலே