ஆணின் காதல் ஆசைகள்

சன்னலோரம் நீ என் தோள் சாய்ந்து பயணம் 
மண் வாசமோடு உன் கூந்தல் வாசம் 
சாரலோடு சேர்ந்து கூந்தல் என் கண் இமையைத் தாக்கும் 
இரு கைகள் கோர்த்துக் குளிர் போக்கும் தருணம் 
தோள் சாய்ந்து போகும் இந்த தொலைதூர பயணம் 
தொடரும் வரை காதல் செய்வோம். 

அடை மழை முடிந்த மாலை நேரம் 
கடற்கரை மணலில் காதலை தேடி, 
அலையோடு கால் உரசி, கைகோர்த்து நடைப்பயணம் 
முழு நிலா வருகையை எதிர்பார்த்து 
காற்றின் வேகம் மீறி காதல் செய்வோம் . 

மிதமான வேகத்தில் இரு சக்கர வாகனத்தில் 
தோள் மீது கை வைத்து, சிறு பயணம் செல்வோம் 
சிதறும் சிரிப்பொலியை என் காதோடு கேட்டு 
சிறிது நேரம் நாம் காதல் செய்வோம். 

கோவத்தின் உச்சம் உன் அழகின் மிச்சம் 
கண்ணாலே மன்னித்துக் கட்டி அணைக்கும் நேரம் 
என் கன்னங்கள் உன் தோள் வந்து சாயும் 
கண்ணீரோடு இருவரும் கொஞ்சம் காதல் செய்வோம்.

எழுதியவர் : Mohanaselvam (2-Sep-17, 2:40 pm)
பார்வை : 946

மேலே