தற்கொலை கோழைகள் சரணாலயம்

முற்றுப்பெறாத ஆசைகளுக்கெல்லாம்
தற்கொலை ஒரு காலும் முடிவாகாது
தற்கொலை கோழைகள் நாடும்
உயிர்க்கொல்லி அதன் விளைவு
ஆற்றமுடியா துயரில் துடிக்கும்
பெற்றோர் உடன்பிறந்தோர் சுற்றத்தார்

அனிதா, எண்ணியது நிறைவேறவில்லை
என்று எண்ணி தவறான முடிவெடுத்து
உன்னை நீ மாய்த்துக்கொண்டாய்
இதில் நீ என்ன வெற்றிகண்டாய்

இளைய தலைமுறையினரே கொஞ்சம் சிந்தியுங்கள்

வாழ்க்கையில் தடங்கல் கண்முன் நின்றால்
அதை நீக்கி முன்னேறுதலே வெற்றிப்பாதைக்கு
உன்னைக் கொண்டு செல்லும்
அதைவிட்டு சோர்ந்து தளர்ந்ந்து மனம் உடைந்து
உன்னை மாய்த்துக்கொண்டால் அதில்
யாருக்கு இலாபம் ?

அனிதா நீ நின்று போராடி
உன் லட்சிய பாதையில் பயணித்து
வெற்றிபெற்றிருந்தால் உன்னைப்போல்
இருக்கும் ஆயிரம் ஆயிரம் இளைஞருக்கு
முன்னோடியாய் இருந்திருப்பாய்
ஐயகோ இதை ஈன்று சொல்வது நீயோ
எதிர்நீச்சல் ஏதுமின்றி உன்னை ஒரு நொடியில்
கோழையையாக்கிக்கொண்டாய் உன்னை
நீயே மாய்த்துக்கொண்டாய் அவலம் பேரவலம் இது

தற்கொலை எப்போதும் கோழைகள் நாடிடும்
சரணாலயம்
இளைய தலைமுறையினருக்கு நான் விடும்
கோரிக்கை - வெற்றிக்கே உங்கள் பாதை
அமைதல் வேண்டும் அதில் தோல்வி வந்து போகும்
நிகழ்வு அதை எதிர்த்து முன்னேறி வீரன் போல்
வெற்றி நாடல் வேண்டும்

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (2-Sep-17, 3:26 pm)
பார்வை : 75

மேலே