காணாமல் போகும் காயங்கள்

காணாமல் போகும் காயங்கள் !
கவிதை by: கவிஞர் பூ.சுப்ரமணியன்

மாமியார்
பேய் என்கிறாய்
மாமனார்
நாய் என்கிறாய் !

நாத்தனார்
நரி என்கிறாய்
தன் பிறந்த வீடே
தாஜ்மகால் என்கிறாய் !

கப்பல்போல்
கார் இருந்தாலும்
ஏ. சி இல்லையென
ஏசி விடுகிறாய் !

தன் மகன்
தஞ்சாவூர் பொம்மைபோல்
தலையாட்டினாலும்
அம்மா பிள்ளையென
எப்போதும் சொல்கிறாய் !

மாமியார்
கண்ணீரெல்லாம்
நீலிக் கண்ணீர்
மகனை கண்ணீரால்
இழுப்பது என்கிறாய் !

உன் சுடுசொற்கள்
என் உள்ளத்தை
எப்படியெல்லாம் சுட்டு
காயப்படுத்துகின்றன !

பேரனோ பேத்தியோ
‘பாட்டீ’ எனக் கூறி
பாசமுடன்
என் கழுத்தை
கட்டிப் பிடிக்கும்போது
என் காயங்கள் எல்லாம்
காணாமல் போகும்!

பூ.சுப்ரமணியன்,
பள்ளிக்கரணை, சென்னை

எழுதியவர் : பூ.சுப்ரமணியன் (2-Sep-17, 3:32 pm)
சேர்த்தது : பூ சுப்ரமணியன்
பார்வை : 98

மேலே