புரட்சிப்பூ அனிதாவிற்காக

புரட்சியை விதைக்க
தன் உடலில் இருந்து மரணித்து
இன்று தமிழ் மக்களின் இதயத்தில் மலர்ந்த புரட்சிப்பூ அனிதாவிற்காக....
இன்று கலைந்திருக்களாம் உன் கனவுகள்.
ஆனால் உன்னாலே,
நாளை ஓராயிரம் கனவுகள் நனவாகும்.
பதினேழு ஆண்டுகளாக
ஒரு கூலித்தொழிலாளி கண்ட கனவு,
தனக்கு விவரம் தெரிந்த நாளில் இருந்தே
ஒரு இலட்சியத்தை வகுத்து
அதை அடைய அயராது உழைத்த
ஒரு ஏழை மாணவி கண்ட கனவு,
கலைந்து போனதே.
கடினமாக உழைத்தும் பயனிறிப்போனதே என்று மனமுடைந்து மாய்த்துக்கொண்டாயோ உன் உயிரை,
உண்மையாக உழைத்தும் உரிய இலக்கை தொடமுடியாமல் போனதை எண்ணி இந்த உலகைவிட்டே விடைபெற்றுக்கொண்டாயோ.
நீ மாண்டு போகவில்லை
எங்கள் மனதை ஆண்டு கொண்டாய்.
நீ இந்த மண்ணைவிட்டு மறைந்தாலும்
எங்கள் மனதில் நீ மறையாமளே இருப்பாய்.
என்றும் மறக்கப்படாமளே இருப்பாய்.
உன்னால் சுவைக்கமுடியாத கனிகளை தன்னைப்போன்றோர்களும் சுவைக்க வேண்டும் என்று உன்னை மாய்த்தாயோ,மாற்றம் வேண்டும் என்றே உன் உடலைவிட்டு உன் உயிரை பிரித்து சென்றாயோ.
உன் உயிர் பிரிந்து சென்றாலும் உன் உடலை இந்த மண்ணில் விதையாக விதைத்துதான் சென்றிருக்கின்றாய்.
விதைத்துக்கொண்டே இரு
முலைத்தால் மரம்
இல்லையேல் இம்மண்ணுக்கு உரம்
என்று உன்னையே விதைத்து சென்றாயோ.
நீ புதைக்கப்பட்டாலும் மறைந்து போவதும் இல்லை,மறக்கப்பட்டுப்போவதும் இல்லை.
நீ விதையானாய்
உன்னாலே ஒரு புதிய விருச்சம் உருவாகும்.
அந்த விருச்சத்தின் கனிகளை நாளைய எதிர்காலம் சுவைக்கும்.
உன் சகோதர,சகோதரிகள் அதற்கு வழிவகுப்பார்கள்.
இனியும் இன்னமும் ஒரு அனிதாவை இழக்க தயாராக இல்லை.உன்னை இழந்து நிற்கும் உன் குடும்பத்திற்கு
இன்று உன்னாலே ஓராயிரம் உறவுகள் கிடைத்துவிட்டது,இருந்தாலும் உன் இடத்தை யாரலும் நிரப்பிவிடமுடியாது என்பது வருத்தமே.

எழுதியவர் : கு.கார்த்திக். (2-Sep-17, 3:54 pm)
சேர்த்தது : கார்த்திக்
பார்வை : 87

மேலே