என் உயிரினும் மேலான - நெடுந்தொடர் - - - பாகம் 9

நான்கு நாட்கள் நட்பு குடும்பம் என்று நன்றாய் கழிந்தன ப்ரவீனுக்கு. விஜியை பற்றி நினைவு வரவே இல்லை அவனுக்கு. என்ன இருந்தாலும் அவள் யாரோ தானே.... கடந்து செல்லும் மேகக்கூட்டம் போல அவன் மனதிலிருந்து விஜி மறைந்தே போனாள்.

விஜியை கண்டத்திலிருந்து ஐந்தாம் நாள்...காலை ஐந்து மணி, பர்ஸ்ட் ஷிப்ட்க்கு தயாராகியபடியே தாய் அமுதாவிடம் கூறினான் பிரவீன். "அம்மா இன்னிக்கு கொஞ்சம் லேட்டா ஆகும், எனக்காக வெயிட் பண்ண வேணாம். அடுத்த மாசம் டோர்னமெண்ட்க்கு யூனிஃபாம் டிசைன் செலக்ட் பண்ண போறோம். அதனால நீங்க சாப்பிட்டு தூங்குங்க. நான் வேலை எல்லாத்தயும் முடிச்சுட்டு உங்களுக்கு போன் பண்றேன்" என்றான்.

"எங்கடா போய் செலக்ட் பண்ண போறீங்க" என்றாள் அமுதா.

"லாரன்ஸ் ரோடு மா. ஏன், திருப்பாப்புலியூர் ல ஏதாவது வாங்கணுமா?" என்றான் பிரவீன்.

"ஆமாம் டா, டெய்லி சௌம்யா கூட காலைல பீச் கு போகும்போது ரொம்ப குளிருது, வாக்கிங் அப்போ குளிரல. ஆனா வண்டில இங்க இருந்து போகும்போது தான் குளிருது. அதனால ஒரு மப்ப்ளர் வேணும் டா" என்றாள் அமுதா.

"சரிம்மா, வாங்கிட்டு வரேன், என்ன கலர்" என்றான் பிரவீன்.

"நல்ல மெரூன் கலர் வாங்கிட்டு வா டா" என்றாள் அமுதா.

"சரிம்மா, இன்னிக்கு கிறிஸ்துமஸ் வேற, சோ, லெனின் க்கு விஷ் பண்ணனும். நீயும் ஒரு கால் பண்ணி விஷ் பண்ணு. அவனுக்குன்னு யாரு இருக்கா" என்றான் பிரவீன்.

"டேய், அவன் என்ன உண்மையான கிறிஸ்டியனா. அவன் கழுத்துல கெடந்த சிலுவை டாலரை வெச்சுகிட்டு அவனுக்கு அந்த பேரு வெச்சாங்க அந்த ஆஸ்ரமத்துல. ..." அமுதா பேசிக்கொண்டிருக்கும்போதே "அம்மா, ப்ளீஸ் அதெல்லாம் இப்போ எதுக்கு, விஷ் பண்ணு...அவ்ளோதான், ஏதாவது ஏடாகூடமா அவன்கிட்ட பேசிடாத.அவனே பாவம் ராப்பகலா ஆஸ்பத்திரில கெடக்கான் ஒரு அனாதை குழந்தையோட டிரீட்மெண்ட்க்காக...ரொம்ப நேரம் பிளேடு போடாம அவன்கிட்ட விஷ் பண்ணிடு.பை" என்றான் பிரவீன்.

"சரி சரி" என்று சொல்லிக்கொண்டிருக்கும்போதே வெளியே சௌமியாவின் குரல் "அக்கா, அமுதா அக்கா, வாங்க, நேரம் ஆகுது" என்றாள்.

"சரி டா, சௌம்யா வந்துட்டாள், நான் வாக்கிங் போறேன், நீயும் ஷிப்ட்க்கு கெளம்பு, ப்ரத்தி, கதவை உள்ளால பூட்டிட்டு இரு. நான் சீக்கிரம் வந்துடறேன்." என்றபடி வெளியே சென்றாள் அமுதா. பின்னாலேயே ப்ரவீனும் சென்றான்.

மாலை.....

"டேய் பிரவீன், எங்கடா இருக்க....நாங்க எல்லாரும் பஸ் ஸ்டாண்ட் ஆப்போசிட்ல ஆனந்த பவன் வாசல் ல நிக்கறோம். நீ வரும்போது முபாரக்கையும் கூட்டிட்டு வரியா" போனில் ரியாஸ்.

"சரி டா, யாராரு இருக்கீங்க, " என்றான் பிரவீன்.

"நான், விஜய், ரகு மட்டும் தான், லெனின் ஆஸ்பத்திரி ல இருக்கான்.மத்த எல்லாரும் பிஸியா இருக்காங்க டா" என்றான் ரியாஸ்.

"சரி சரி, வந்துட்டே இருக்கேன், ஆன் தி வே ல முபாரக் க பிக்கப் பண்ணிக்கறேன்." என்றான் பிரவீன்.

ஒரு அரைமணி நேரம் கடந்திருக்கும். ப்ரவீனும் முபாரக்கும் வந்து சேர்ந்தனர்.

"டேய், என்னடா இவ்ளோ லேட்" என்றான் விஜய்.

"இல்லடா, முபாரக் கிளம்ப லேட் பண்ணிட்டான், நர்கீஸோட கால்...அதான்" என்றான் பிரவீன்.

"இவனை டீம்ல இருந்து கெளப்பிட வேண்டிது தான். இவனுக்கு வேற கேம் ல தான் இப்போ இன்டெரெஸ்ட் இருக்கு" என்றான் ரகு.

"மச்சி....அப்டி இல்லடா, அவளுக்கு ஏதோ புது போன் வாங்கணுமாம். அதான் எங்க வாங்கலாம் னு கேட்டாள்..சரி டா, வாங்க...எந்த ஷாப் ல போய் பாக்கலாம் பர்ஸ்ட்." என்றான் முபாரக்.

"இது என்ன டா கேள்வி, எப்போதும் நம்ம லக்கி ஷாப் பக்ஷி தான்" என்றான் ரியாஸ்.

"கரெக்ட் டா...நாம எப்போ டோர்னமெண்ட் போனாலும் அங்க தான் ட்ராக்ஸ் எடுக்கறோம். ஜெய்க்கறோம்" என்றான் விஜய்.

"அப்போ லாஸ்ட் இயர் நெய்வேலி லிக்னைட் டீம் கிட்ட தோத்தது?" சிரித்துக்கொண்டே கேட்டான் ரியாஸ்.

"அது நம்ம டீம் மிஸ்ட்கே இல்லையே டா. ரெண்டு டெசிஷன் அம்பயர் தப்பா குடுத்தாரு. ரெண்டுமே நம்ம கீ விக்கெட். ரகு அண்ட் முபாரக். அப்புறம் கூட நாம எவ்ளோ பைட் பண்ணோம். ஜஸ்ட் நாலு ரன் ல தான தோத்தோம். அது கூட ப்ரவீனும் நானும் நேரா மோதிக்கிட்டு விழுந்தோம் ரன் ஓடும்போது. சோ என்னால ரன் ஓடிஏ முடியாம ஓடிவந்த பிரவீன் திரும்பி போக சொல்லி ரன் அவுட் ஆயிட்டான். ஒரு பால் நாலு ரன் வேணும். வேற விக்கெட் இல்ல, கார்த்திக் , ஷாகுல் 2 பேர் தான் இருந்தாங்க. வேற வழி இல்லாம கார்த்திக் இறங்கினான். அவன் பாவம் சின்ன பையன், என்ன பண்ணுவான். நல்ல பவுன்சர் ல ஹெல்மெட் ல வாங்கினான் அடி. இது ஒரு நல்ல பைட்டிங் மேட்ச் டா" என்றான் விஜய்.

"மச்சி...என்ன தம்பிக்கு சப்போர்ட்டா" என்றான் முபாரக்.

"டேய்....மூடிட்டு வாங்க டா டைம் ஆயிருச்சு" என்றான் பிரவீன்.

பக்ஷி துணிக்கடை,

"தல....எப்படி இருக்கீங்க" துணி எடுத்துக்காட்டும் வெங்கடேசனுக்கு இந்த வார்த்தைகளை சொன்னான் விஜய்.

"வாங்க...என்ன ரொம்ப நாளா காணோம், நீங்க என்ன.....மேட்ச் வந்தா தான் இந்த செக்ஷன் கு வருவீங்க. சரி, சொல்லுங்க, என்ன கலர் ல காம்பினேஷன் வேணும்" என்றார் வெங்கடேசன்.

"டேய்...நீங்க பாத்துட்டு இருங்க, நான் கீழ கிரௌண்ட் ப்ளோர்ல போய் எங்க அம்மாக்கு ஒரு மப்ப்ளர் வாங்கிட்டு வந்துடறேன்" என்றபடி கீழ் தளத்திற்கு சென்றான் பிரவீன்.

கீழ் தளத்தில்,

"அண்ணா...மப்ப்ளர்...."என்று கேட்ட ப்ரவீனுக்கு "அந்த லாஸ்ட் ல இருக்குற செக்க்ஷன் சார்" என்று பதில் அளித்தார் அங்கிருந்த சூப்பர்விஸர்.

திரும்பிய பிரவீன் சற்றும் எதிர்பாராமல் அங்கு நின்றிருந்த பெண் மீது மோதிவிட்டு, "ஐயோ, சாரிங்க" என்றான்.

அது விஜியின் தங்கை ரம்யா.

"அட, ரம்யா...இங்க என்ன பண்றீங்க" என்றான் பிரவீன்.

"ஓ, நீங்களா.....பிரதீப்.....நல்ல இருக்கீங்களா" என்றாள் ரம்யா.

"கிழிஞ்சுது, நான் உங்க பேரு ரம்யா ன்னு எவ்ளோ கரெக்ட்டா சொன்னேன், என் பேரு பிரதீப் இல்லங்க. பிரவீன்" என்றான் பிரவீன்.

"ஓ சாரி சாரி. பிரவீன். நாங்க சும்மா நியூயேற்கு பார்ச்சஸ் வந்தோம்" என்றாள் ரம்யா.

"அப்டியா, எங்க...உங்க அம்மா அக்கா எல்லாரும்" என்றான் பிரவீன்.

"அவங்க அண்டர் கிரௌண்ட் செக்ஷன் கு போயிருக்காங்க." என்றாள் ரம்யா.

"அண்டர் கிரௌண்ட் செக்ஷன்? அங்க என்ன இருக்கு?" என்றான் பிரவீன்.

"ரொம்ப முக்கியமா? உங்களுக்கு தேவை இல்லாத விஷயம்...வேணும்னா நீங்க போய் பாத்துக்கோங்க" என்றாள் ரம்யா.

"ஆமாம் ஆமாம் அதுவா முக்கியம், சரி, அவங்க வந்தாங்கன்னா ரொம்ப கேட்டதா சொல்லுங்க, நான் கிளம்பறேன். அம்மாக்கு மப்ப்ளர் வாங்கணும், கிரிக்கெட் கு ஜெர்சி வாங்கணும், பல வேலை கெடக்கு" என்றான் பிரவீன்.

"ஓ, நீங்க கிரிக்கெட் பிளேயர் ஆஹ்?" என்றாள் ரம்யா.

"ஹ்ம்ம், என்ன இப்டி கேட்டுட்டிங்க, நான் தான் கடலூர் டிஸ்ட்ரிக்ட் கேப்டன். " என்றான் பிரவீன்.

"ஓ, அவ்ளோ பெரிய கிரிக்கெட்டர் ஆஹ் நீங்க. என் அக்கா பிரிஎந்து கூட ஒரு கிரிக்கெட்டர். பெரிய பௌலர். விழுப்புரம் டீம் கு வெளயாடுறாரு. எங்க அக்கா க்ளாஸ்மேட்டோட அண்ணன். " என்றாள் ரம்யா.

"யாரு அது நமக்கு தெரியாம...அவன் பேரு என்ன": என்றான் பிரவீன்.

"நேம் தெரியாது.....பட் என் அக்காவோட பிரென்ட் நேம் ரோஸெலின்" என்றாள் ரம்யா.

"சரி, அப்புறமா விசாரிச்சுக்கறேன்....வேலை இருக்கு...பை பை பை" என்றபடி மப்ப்ளர் செக்ஷன் க்கு சென்றான் பிரவீன்.

மப்ப்ளர் வாங்கிவிட்டு திரும்பிய பிரவீன், அங்கே விஜியை கண்டான். "அட, விஜி, எப்படி இருக்கீங்க, இப்போ தான் ரம்யாவை பாத்தேன், நல்ல இருக்கீங்களா, அம்மா எப்படி இருக்காங்க" என்றான்.

"ம்ம், ஆல் ஆர் ஓ.கே. நாங்க கெளம்பறோம், நீங்களும் கிளம்புங்க" என்றாள் விஜி.

"ஹலோ, என்ன இப்டி பளார் னு அறஞ்சாப்போல பதில் சொல்றிங்க." என்றான் பிரவீன்.

விஜியின் முகம் ஒருவித சங்கடத்தில் இருப்பதாக உணர்ந்தான் பிரவீன். "சாரி விஜி, ஏதோ ப்ராப்ளேம் போல இருக்கு உங்க முகம், நான் பேசறது உங்களுக்கு பிடிக்கல போல, சாரி, மன்னிச்சுருங்க, நான் வரேன்" சோகமாக சென்றுவிட்டான் பிரவீன்.

சற்று நேரம் கழித்து.....

"டேய்...எங்கடா இருக்க, சீக்கிரம் மேல வாடா. நாங்க டிசைன் எல்லாம் செலக்ட் பண்ணி வெச்சுருக்கோம், வந்து ஓகே பண்ணு. " கால் செய்தான் முபாரக்.

"இல்லடா, நான் வீட்டுக்கு வந்துட்டேன்" என்றான் பிரவீன்.

"என்ன டா....லூசா நீ. நாங்க எல்லாரும் இங்க வெயிட் பண்ணிட்டு இருக்கோம்,. நீ பெரிய புடுங்கி மாதிரி வீட்டுக்கு போயிட்ட னு சொல்ற, " என்றான் முபாரக் கோவமாக.

"இல்லடா மனசு சரி இல்ல...நான் அப்புறம் பேசறேன்" கட் செய்தான் பிரவீன்.

முபாரக், "என்னடா இவன்....நெஜமாவே இவன் ஒரு லூசு தான் டா. சரியான சைக்கோ தான். நாம எல்லாரும் இங்க இருக்கோம். இவன் மயிரேபோச்சுன்னு கெளம்பி வீட்டுக்கு போய்ட்டான். கேட்டா மனசு சரி இல்லயாம்." என்றான் கோபமாக.

"டேய்...விடு....நாமளே பிரவீனை அப்படி சொல்லக்கூடாது. என்ன ப்ராபளமோ, டிரஸ் எடுத்துட்டு அப்புறமா அவனுக்கு கால் பண்ணலாம்" என்றான் ரகு.

"இல்ல டா, அவன் இல்லாம நாம டிரஸ் செலக்ட் பண்ண வேணாம், நாம நாளைக்கு வருவோம்" என்றபடி கிளம்பினர் அனைவரும்.

விஜியின் பாட்டி வீட்டில்.....

"அக்கா....நீ அப்டி சொன்னது ரொம்ப தப்பு தெரியுமா" என்றாள் ரம்யா.

"என்ன சொன்னது....யாருகிட்ட" என்று கேட்டாள் விஜி.

"அந்த பிரவீன் கிட்ட......" என்றாள் ரம்யா.

"ரம்மி....நீ வாய மூடு, எனக்கு தெரியும். இது நம்ம வீடு இல்ல, அங்க போய் பேசிக்கலாம், அம்மா இருக்காங்க" என்று கூறி உரையாடலை நிறுத்தினாள் விஜி.

பகுதி 9 முடிந்தது.

--------------தொடரும்----------------

எழுதியவர் : ஜெயராமன் (2-Sep-17, 3:59 pm)
சேர்த்தது : நிழலின் குரல்
பார்வை : 297

மேலே