என் உயிரினும் மேலான - நெடுந்தொடர் - - - பாகம் 11
அதிகாலை நான்கரை, அலாரம் ஒலித்தது. பிரவீன் எழுந்தான். அமுதாவோ தினமும் நான்கு மணிக்கு எழுந்து வாசல் தெளித்து கோலம் போடும் பழக்கம் உடையவள் ஆகையால் ஏற்கனவே எழுந்திருந்தாள்.
"இந்த ப்ரத்தி இன்னுமும் தூங்கறா பாரு, பீச் கு வாக்கிங் வரேன்னு சொன்னா மட்டும் போறாது. எழுந்திருக்கணும். " என்றபடி அவளை எழுப்பினான் பிரவீன்.
சற்று நேரத்தில் சௌம்யா வாசலில் வந்து நின்றாள். "அமுதா அக்கா.."என்றாள்.
"தோ வரேன் சௌம்யா....என்றபடி வெளியே வந்தாள் அமுதா.
"என்னக்கா. புது மாப்பிளரா? செம்மயா இருக்கு.....அது இருக்கட்டும், உங்க பொண்ணு எங்க கெளம்பறா?" என்றாள் சௌம்யா.
"இன்னிக்கு லீவு இல்ல, அதான், சரி வா ன்னு சொன்னேன் வாக்கிங் கு" என்றாள் அமுதா.
"பிரவீன் கொண்டு விட போறானா பீச் ல? திரும்பி வரும்போது?" என்று கேட்டாள் சௌம்யா.
"ஷேர் ஆட்டோ ல வந்துருவா" என்றாள் அமுதா.
"சரி, பிரவீன் நீ கெளம்பு, நான் வீட்டை பூட்டிட்டு சௌம்யா கூட வரேன். நான் வரவரைக்கும் அவ கூடவே இரு டா" என்றாள் அமுதா.
"சரிம்மா....இம்சை" என்றபடி கிளம்பினான் பிரவீன். பின்னால் பிரதிபா அமர்ந்திருந்தாள்.
பிரவீன் புதுப்பாளையம் நாலு ரோடு சந்திப்பில் வந்ததும் "அண்ணா, அவங்க வரத்துக்குள்ள ஒரு டீ குடிச்சிட்டு போலாமே" என்றாள் பிரதிபா.
"ஏன் அவங்க வரத்துக்குள்ள, அவங்களுக்கும் வாங்கி தரலாமே." என்றபடி போனை எடுத்து அமுதாவின் செல் கு கால் செய்தான்.
"அம்மா, இந்த புதுப்பாளையம் ஊரக வளர்ச்சித்துறை ஆபீஸ் கிட்ட ஒரு டீ கடை இருக்கு பாரு, அங்க நிக்கறோம், உங்களுக்கும் டீ சொல்லிட்டோம், இங்க வாங்க" என்று கூறி கட் செய்தான்.
"அண்ணா, நாலு டீ, ஒண்ணுல சக்கரை தூக்கலா, ரெண்டு ல கம்மியா, ஒண்ணு நார்மல்." என்று டீ மாஸ்டரிடம் சொல்லிவிட்டு முபாரக் கு கால் செய்தான்.
அரைத்தூக்கத்தில் போனை எடுத்தான் முபாரக். "சொல்லு டா....என்ன இவ்வளவு ஏர்லி யா போன்' என்று கேட்டான் முபாரக்.
"இல்லடா, நான் வேலைக்கு போறேன். அம்மாவும் ப்ரத்தியும் பீச் ல இருப்பாங்க. நீ ஒரு 7 மணிக்கா வந்து அவங்கள வீட்ல ட்ரோப் பண்ணிட்டு அப்புறம் ப்ராக்டீஸ்க்கு போறியா?" என்றான் பிரவீன்.
"சரி டா. அம்மாவை வாக்கிங் முடிக்க டென் மினிட்ஸ் இருக்கும்போது எனக்கு கால் பண்ண சொல்லு." என்று கூறிவிட்டு போனை கட் செய்தான் முபாரக்.
போனை கட் செய்யவும் சௌம்யா அமுதா வரவும் சரியாக இருந்தது.
"அம்மா, வாக்கிங் முடிச்சுட்டு நீயும் ப்ரதிபாவும் அந்த கடலோர காவல்படை கட்டடம் கிட்ட வெயிட் பண்ணுங்க. முபாரக் வந்து பிக்கப் பண்ணுவான். சௌம்யா அக்கா, இவங்க 2 பேர் இருக்காங்க, சோ நீங்க முடிச்சுட்டு கிளம்புங்க, இவங்கள என் பிரென்ட் டிராப் பண்ணுவான்." என்றான் பிரவீன்.
டீ குடித்துவிட்டு கடற்கரைக்கு வந்து சேர ஆறு ஆகிவிட்டது.
கடற்கரையில் பெரியார் கல்லூரி மைதானத்தில் குழந்தைகள் வெள்ளை ரோஜாக்கள் போல ஒயிட் அண்ட் ஒயிட் இல் கிரிக்கெட் விளையாட கூடி இருந்தனர். சூரியன் உதயம் இன்னும் ஆகவில்லை.அனால் வெளிச்சம் வர தொடங்கி இருந்தது.
அமுதா சௌம்யா பிரதீபா மூவரும் கடற்கரை நோக்கி செல்ல, பிரவீன் வேகமாக வண்டியை திருப்பினான்.
அங்கே விஜியும் ரம்யாவும் நின்றிருந்தனர்.
பிரவீன் அவர்களை பார்க்க, அவர்களும் பிரவீனை பார்த்தனர். அனால் பிரவீன் அவர்களிடம் ஏதும் பேசாமல் வண்டியை ஸ்டார்ட் செய்ய, "ஹலோ....பிரவீன்" என்றாள் விஜி.
முதல் முறை அவளிடமிருந்து அவன் பெயர். என்ன ஒரு இனிமை.....
ஆனாலும் ஏதும் பேசாமல், வண்டியை ஸ்டார்ட் செய்ய முயன்றபோது, விஜியும் ரம்யாவும் அருகில் வந்திருந்தனர்.
"என்ன சொல்லுங்க" என்றான் பிரவீன்.
"நீங்க ரொம்ப கோவமா இருக்கீங்க போல" என்றாள் விஜி.
"பின்ன என்னங்க....நேத்து நான் உங்ககிட்ட என்ன கேட்டேன். எப்படி இருக்கீங்க ன்னு தான கேட்டேன்.எதுக்கு அவ்ளோ கோவமா பதில் சொன்னீங்க. என்கிட்டே யாருமே இவ்ளோ ஹார்ஷா பேசினதே இல்ல." என்றான் பிரவீன்.
"எனக்கும் அப்படி பேசினது ரொம்ப கஷ்டமா தான் இருந்துச்சு. பட் ஏன் அப்படி பேசினேன் னு தெரிஞ்சுக்கோங்க.நீங்க பர்ஸ்ட் யாருன்னே எனக்கு தெரியாது. நீங்க சொன்ன ஏதும் உண்மையா பொய்யா னு தெரியாது, ஈவென் உங்க நேம் பிரவீன் னு சொன்னீங்க, அது கூட ரியல் ஆஹ் னு தெரியாது. பட் ஸ்டில் அன்னிக்கு உங்ககூட கார்ல வந்தோம். நீங்க இன்டேன்ஷ்னலா என்னை முன்னாடி உக்காரவெச்சதா எங்க அம்மா நெனச்சங்க. நான் உங்ககிட்ட பேசும்போதெல்லாம் பின்னால இருந்து என்னை கிள்ளிக்கிட்டே இருந்தாங்க. அதுக்கு அர்த்தம் நான் உங்ககிட்ட ஏதும் சொல்லக்கூடாதுன்னு. பட் நான் உங்ககிட்ட நார்மலா பேசிக்கிட்டு தான் வந்தேன். அது என் அம்மாக்கு சுத்தமா பிடிக்கல. அன்னிக்கு என் பாட்டி வீட்ல என்ன நீங்க விட்டுட்டு போனதும் எனக்கு குடுத்தாங்க பாருங்க டோஸ்.என்னால ஏத்துக்கவே முடில. இதுவரைக்கும் என்னோட அம்மா எனக்கு அப்படி ஒரு டோஸும் குடுத்ததில்ல அப்படி ஒரு அடவிசும் குடுத்ததில்ல.நேத்து அவங்களும் துணிக்கடைக்கு வந்திருந்தாங்க. அவங்க நீங்க என்னோட பேசறதை பாக்றதுக்குள்ள உங்கள அந்த இடத்துலேந்து அனுப்ப தான் நான் அப்படி நடந்துக்கிட்டேன்....ஸ்டில் நீங்க கோவமா இருந்தா சாரி. மன்னிச்சுருங்க." என்றாள் விஜி.
இவ்வளவு நேரம் விஜியின் அழகு உதட்டில் இருந்து வந்த வார்த்தைகளை அணு அணுவாக ரசித்து கேட்ட பிரவீன், "சோ, இங்க என்ன பண்றீங்க, உங்க அம்மா எங்க" என்றான் பிரவீன்.
"நான் தான் சொன்னேனே, எங்க தாத்தாக்கு திதி னு, இன்னிக்கு பௌர்ணமி. அது மட்டும் இல்ல, எமகண்டம் ஆறு ஏழரை. அதுக்குள்ள திதி குடுக்கணும். சோ நாங்க அஞ்சு மணிக்கெல்லாம் வந்து குடுத்துட்டோம். அம்மா, பாட்டி ரெண்டு பேரையும் பெரிய மாமாவும் சின்ன மாமாவும் வண்டி ல கூட்டிட்டு போய்ட்டாங்க. இங்க தான புதுப்பாளையத்துல வீடு. சோ அவங்கள டிராப் பண்ணிட்டு எங்க 2 பேரையும் வந்து கூட்டிட்டு போறேன் னு சொல்லிருக்காங்க.....ஆமாம், நீங்க என்ன பண்றீங்க இங்க." என்றாள் விஜி.
"என் அம்மாவும் என் தங்கையும் வாக்கிங் போக பீச் ல டிராப் பண்ணிட்டு போறேன்" என்றான் பிரவீன்.
"நைஸ் மீட்டிங் யூ பிரவீன். நீங்க உண்மையா ரொம்ப நல்ல டைப்." என்றாள் விஜி.
"தேங்க்ஸ், நைஸ் மீட்டிங் யு டூ" என்றான் பிரவீன்.
"ஓகே நீங்க கிளம்புங்க" என்றாள் ரம்யா.
"இவ்வளவு நேரா சொல்லாதீங்க ரம்யா,சரி, உக்காருங்க, உங்கள மாரியம்மன் கோயில் ளிட்ட இறக்கி விட்டுட்டு போறேன். " என்றான் பிரவீன்.
"வேண்டாம், நீங்க போங்க," என்றாள் ரம்யா.
அனால் விஜி, "சரி, வரோம்," என்று சொல்ல ஆச்சர்யமாக பார்த்தாள் ரம்யா.
ப்ரவீனால் கூட இதை நம்ப முடியவில்லை.
"ட்ரிப்பிள்ஸ் எப்டிக்கா போறது இந்த வண்டி ல"என்றாள் ரம்யா.
"நான் சொல்றேன், நீ போய் டபெல் சைடு போட்டு உக்காரு," என்றாள் விஜி.
ரம்யா குழப்பத்தில் விஜி என்ன செய்கிறாள் என்று புரியாமல் இரண்டு பக்கம் காலை போட்டு உட்கார்ந்தாள்.
அவளின் பின்னால் விஜியும் இரண்டு பக்கம் கால் போட்டு உட்கார்ந்தாள். அவள் ஏறும்போது பிரவீனின் தோளில் கை வைத்து ஏறிய அந்த நொடி......பிரவீனின் மனதில் என்ன ஒரு தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கும் என்பதை வார்த்தைகள் போதாது வர்ணிப்பதற்கு.
எந்த பேச்சும் இல்லை. அமைதியாய் நகர்ந்தது வண்டி.
மாரியம்மன் கோயில் வரும் வரையில் இடையில் ரம்யா இருந்தும் அவளை பிடித்துக்கொள்ளாமல் பிரவீனின் தோளை பிடித்தபடியே வந்தாள் விஜி.
மாரியம்மன் கோவில் புதுப்பாளையத்திலேயேவா இருக்க வேண்டும்? ஒரு நானூறு ஐந்நூறு கிலோமீட்டர் தாண்டி இருக்கக்கூடாதா? பிரவீனின் மனம் இவ்வாறாக எண்ணியது.
மாரியம்மன் கோயில் வந்தது.
இறங்கினர் இருவரும்.
"சரி பிரவீன், நாங்க கெளம்பறோம், நெஸ்ட் டைம் இருந்தா சான்ஸ் இருந்தா மீட் பண்ணலாம்" என்றாள் விஜி.
"கண்டிப்பா விஜி, ஓகே பை" என்றான் பிரவீன்.
"பிரவீன், உங்க காண்டாக்ட் நம்பர்...." என்றாள் விஜி.
பிரவீன் மனம் துள்ளியது."9367179104 " என்றான் பிரவீன்.
"உங்க நம்பர்???" என்றான் பதிலுக்கு.
"9894697173 " என்றாள் விஜி.
"ஓகே நான் கிளம்பறேன், மணி ஆயிருச்சு" ஆறரை ஆயிருச்சு. ஏழு மணிக்கு டூட்டி ல இருக்கணும்." என்றபடி வேகமாக வண்டியை செலுத்தினான் பிரவீன்.
பிரவீன் சென்றதும் "அக்கா, எதுக்கு நம்பர் எல்லாம் குடுக்கற, உனக்கே தெரியும் அம்மாக்கு இதெல்லாம் பிடிக்கலன்னு, அப்பாக்கு தெரிஞ்சா அதுக்கு மேல.நீ நல்லா மாட்ட போற" என்றாள் ரம்யா.
"அதெல்லாம் ஒண்ணும் இல்ல, ஹி இஸ் எ குட் கய்" என்றாள் விஜி.
"அக்கா, அது இருக்கட்டும். அவன்கூட வண்டி ல என்னை நடுல உக்காரவெச்சுட்ட நீ, நான் எவ்ளோ அந்நீசியா பீல் பண்ணேன் தெரியுமா....எதுக்கு அவனோட வரேன் னு சொன்ன...இப்போ மாமா பாத்திருந்தா வீட்ல போட்டு குடுத்துடுவாரு." என்றாள் ரம்யா.
"இல்ல ரம்மி, நேத்திக்கே அவனை ரொம்ப ஹர்ட் பண்ணிட்டோம்."என்றாள் விஜி.
"பண்ணிட்டேன்னு சொல்லு....என்ன பண்ணிட்டோம்...நான் ஒண்ணும் பண்ணல.....இதுக்கே அந்த லூசு நேத்திக்கு என்கிட்டே வந்து நீ எங்கன்னு கேட்டுச்சு....நான் சொன்னேன், நீ அண்டர் கிரவுண்ட் செக்ஷன் கு போயிருக்க ன்னு. நான் தெளிவா சொன்னேன், அண்டர் கிரௌண்ட் செக்ஷன் னு, அந்த லூசு அதா புரிஞ்சுக்காம அந்த செக்ஷன் ல என்ன இருக்குன்னு கேட்டுச்சு....நான் காண்டாகி நீயே போய் பாத்துக்கோ னு சொல்லிட்டேன்." சிரித்தபடியே சொன்னாள் ரம்யா.
விஜியும் சிரித்தபடியே நடந்தாள்.
"சரி...இப்போ மாமா பாத்திருந்தாங்கன்னா....' என்றாள் ரம்யா.
"அவங்க நம்மள க்ராஸ் பண்ணவே இல்ல" என்றாள் விஜி.
"சரி...இப்போ நாம எப்படி வந்தோம் னு கேட்டா..."
"ஷேர் ஆட்டோல வந்தோம் னு சொல்லுவோம்" என்றாள் விஜி.
.
வீட்டிற்குள் நுழைந்ததும் அங்கே இரண்டு மாமாக்களும் இல்லை. "எங்கடி மாமா" என்று கேட்டாள் புவனா.
"மாமா வரலையே, நாங்க ஒரு ஷேர் ஆட்டோ ல வந்தோம்" என்றாள் விஜி.
"ஏய், என்ன அவசரம், அதான் மாமா வரேன் னு சொன்னாங்க இல்ல" என்றாள் புவனா.
"அம்மா, நாங்க ஷேர் ஆட்டோ ல வரும்போது கூட அவங்க எங்களை க்ராஸ் பண்ணி போகல. கால் பண்ணி கேளுங்க எங்க இருக்காங்கன்னு" என்றாள் விஜி.
கால் செய்தாள் புவனா.
"எங்கடா இருக்க சாமிநாதா?" என்று விஜியின் சின்ன மாமாவும் புவனாவின் இளைய தம்பியான சாமிநாதனுக்கு.
"அக்கா, வண்டி ல என்ஜின் சீஸ் ஆயிரத்து போலருக்கு, நான் இங்க முக்கூட்டுல கோயில் பின்பக்கம் நிக்கறேன். இராமநாதன் மெக்கானிக் கூட்டிண்டு வர போயிருக்கான், இந்த நேரத்துல யாரு இருப்பா.அந்த ஆத்தங்கரை தரைக்காத்தம்மன் கோயில் கிட்ட 2 பேர் இருக்கா,அவங்களைத்தான் கூப்பிட போயிருப்பான். நீ ஒண்ணு பண்ணு, விஜி ரம்யாக்கு போன் பண்ணி ஷேர் ஆட்டோ ல வர சொல்லிடு" என்றான் சாமிநாதன்.
"அவா ஆல்ரெடி வந்துட்டா...நீங்க பொறுமையா ரெடி பண்ணிட்டு வாங்க" என்றாள் புவனா.
ரம்யாவும் விஜியும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டனர்.இருவர் முகத்திலும் புன்னகை.
மணி ஏழே முக்கால் ஆனது. பிரவீனிடம் இருந்து விஜிக்கு ஒரு மெசேஜ். "வீட்ல ஏதும் கேட்டார்களா எப்படி வந்தீங்கன்னு?"
"நோ ப்ரப்ளேம்...பட் தேங்க்ஸ்."என்று ரிப்ளை செய்தாள் விஜி.தனக்குள் சிரித்துக்கொண்டாள்.
பாகம் 11 முடிந்தது.
----------------------தொடரும்-----------------------

