மீட்டெடுத்த சுதந்திரம் கேள்விக்குறியாய்
மகேசன் எழுதிய தீர்ப்பு
சாகடிக்க
நாம் எழுதிய தீர்ப்பு
நம்மையே நோகடிக்க
சுகவாசமாய் வாழ்ந்த
விளங்காத கூட்டம்
பதவிக்காக விசுவாசம்
என்றே நடிக்க
பலியிட துணிந்ததே
உன்னையும் என்னையும்,
கிடைத்தது சுதந்திரம்
போராட்டம் மட்டும்
ஓயவில்லை
அகிம்சா வழியில்
தான் என்றாலும்
உயிர் பலியோ
நிற்கவில்லை
மீண்டுமொரு போராட்டம்
இனைக்குமோ நம்மை
இல்லை கூடி கூவி
குலைந்து போகுமோ
அன்றுபோல இந்த
கூட்டம்?
மீட்டெடுத்த சுதந்திரம்
கேள்விக்குறியாய்!
#Sekar_N