உன்னை காதலிப்பது தவிர வேறென்ன தெரியும் எனக்கு ?
உடைமைகள் இருந்தால் உன்னில் காட்டும் பாசம் குறைந்து விடும் என்பதற்காக .. எனக்காக வேறு ஏதும் உடைமைகள் தராத இறைவன் .
உன்னையும் உலகையும் கையில் தந்தான். நான் உன்னை பெற்று உலகை ஒதுக்கினேன் ....
நீயோ உலகை பெற்று என்னை ஒதுக்கினாய் .. மறு நொடியே உலகமும் என்னை ஒதுக்கியது.
இன்றோ நான் முகவரி இல்லா தேசத்தில்
காத்திருப்பதும் வழி பார்த்திருப்பதும்
மீண்டும் உன்னை காண்பதற்கு
ஆயிரம் வாழ்த்து அட்டைகள் கையில் ஏந்தியவாறே ..
அடித்தாலும் ... வெறுத்தாலும் உன்னை காதலிப்பது தவிர வேறென்ன தெரியும் எனக்கு ?
- நிஷான் சுந்தரராஜா -