என் பார்வையில் இறைவனும் நானும்
இறைவனின் பாதத்தில்
இன்பங்களை தேடினேன்..
என்னுள் வைத்து கொண்டு...
நடப்பவை யாவும் அவனென!
பழி சொல்ல மட்டுமே உதவினான்.....
பழி நானென உணர்ந்தபின்
அவன் என்னிடமுமில்லை
அண்டத்திலுமில்லை...
பிண்டங்களின் சாவை நீரில்
எழுதாமல்..
பசித்தவனின் வயிற்றில்
நிரப்புபவனே இறைவன்!
பாலும் கூட உலகே!
கடவுள் வான்மீதில்லை..
வாழ்விலுமில்லை...
இந்துவிலுமில்லை...
இஸ்லாமுமில்லை...
கிறிஸ்தவமும் அறவே இல்லை..
இரப்பவனுக்கு இருப்பவன்
தறுதலில்...
நெல்மனியின்
உயிர் எழுதுவோன்
வியர்வையின் நாற்றத்தில்...
மாற்றான் கண்ணீரை
தன் கண்னென
காண்கையில்....
உன்னிலும்!
என்னிலும்!
வாழ்கிறான் இறைவன். வாழ்வதும் உணர்வதும் ஆசைகளும் நிராசைகளும் நீயும் நானென
நானும் இன்னோர் உயிரென நினைக்கும் பொழுது மட்டும்....