புல் திண்ணுமென்று நினைத்தீர்களோ

இது இல்லையேல் அது
அது இல்லையேல் மற்றொன்று...
எவ்வளவு எளிது
அறிவுரை வழங்குவது...

பசித்தால் புல்லைத்
திண்ணுமென்று
நினைத்தீர்களோ இந்த
அரியலூர் புலி...!

கூட்டாட்சி கூரையில்
குறு குறு ஓட்டைகளில்
சிந்தும் துளித்துளி நீரை
குடிப்பவரல்ல நாங்கள்...!

தாகமெடுத்தால்
கரம் உயர்த்தி..
கூரை தகர்த்து.
வானையும் உலுக்கி..
வரவழைப்போம்
கனமழையை...!

அந்த மழைகொண்டு
தீர்ப்போம்..
வாழும் அனிதாக்களின்
தாகத்தை..!

அந்த மழைகொண்டு
கரைப்போம்...
இறந்த அனிதாவின்
சாம்பலை...!

எழுதியவர் : கோபிநாதன் பச்சையப்பன் (5-Sep-17, 9:11 pm)
பார்வை : 123

மேலே