குதிரை பேர ஆச்சி

இந்தச் செட்டி நாட்டில நாந்தாண்டா முதல் மரியாதை ஆச்சி; வயசிலயும் அனுபவத்திலயும் மூத்த குடிமகள் ஆச்சி. என்னப் போயி எவண்டா குதிரை பேர ஆச்சின்னு சொன்னவன். நம்ம செட்டி நாட்டில ஒரு குதிரை, கழுதையைக் காட்டுங்கடா பாக்கலாம். சிலரு என்ன பினாமி ஆச்சின்னும் சொல்லறாங்களாம். அந்தக் கருமாந்தரமெல்லாம் எனக்கு எதுக்குடா. என்ன அரசியல்வாதின்னு நெனச்சிட்டு பேசறிங்களா?
😊😊😊😊😊
அய்யோ ஆச்சி, யாரையோ யாரு என்னவோ ஆட்சின்னு சொல்லறது உங்க காதில ஆச்சின்னு விழுந்திருக்கும். உங்களப் போயி யாராவது பினாமி ஆச்சி, குதிரைபேர ஆச்சின்னு சொல்லமுடியுமா? சொன்னாங்களா நீங்க மின்சார ஆச்சியா மாறி அதிர்ச்சி குடுத்து சரிச்சிடுவீங்களே.

எழுதியவர் : மலர் (6-Sep-17, 12:08 pm)
பார்வை : 294

மேலே