ஆயாகர்

ஏண்டா முருகய்யா, ஒரு வருசம் கழிச்சு உம் பாட்டிய பாக்க வந்திருக்கற. எம் பேத்தி பொறந்து ஏழு மாசம் கழிச்சுத்தான் அவளப் பாக்க முடிஞ்சுச்சு.
😊😊😊😊😊
என்ன செய்யறதுங்க பாட்டிம்மா. நான் வருமான வரித்துறைல வேல பாக்கறேன். அதுவும் ராஜஸ்தானில. கறுப்புப் பணத்தை பிடிக்கறதல தீவிரமா இருக்கறோம். அதனால உங்கள வந்து பாக்க முடில.
😊😊😊😊😊
சரிடா முருகய்யா. பாப்பாவுக்கு நல்ல தமிழ்ப் பேரா வச்சியா.
😊😊😊😊😊
போங்க பாட்டிம்மா. தமிழ்நாட்டில இருக்கற 98% பேரே கொழந்தைகளுக்கு இந்திப் பேருங்களத்தான் வைக்கறாங்க. பெரும்பாலான தமிழ் ஆசிரியர்கள் தமிழப் பேராசிரியர்களே அவுங்க பிள்ளைங்களுக்கு இந்திப் பேருங்களத்தான் வைக்கறாங்க. நான் மத்திய அரசுப் பணில இருக்கறவன். அதிலும் சிறப்பா பணியாற்றியதற்காக குடியரசுத் தலைவர்கிட்ட பாராட்டும் விருதும் வாங்கினவன். நான் போயி எங்க பாப்பாவுக்குத் தமிழ்ப் பேர வச்சா நல்லா இருக்காதுங்க பாட்டிம்மா. அதனால நான் சிரமமே இல்லாம நான் பணியாற்றுகிற துறைப் பேரையே நம்ம பாப்பாவுக்கு வச்சுட்டங்க பாட்டிம்மா.
😊😊😊😊
சரிடா முருகய்யா. பாப்பா பேரச் சொல்லுடா.
😊😊😊😊😊
ஆயாகர்.
😊😊😊😊😊
டெண்டுல்லுக்கர்ருன்னு சொல்லற மாதிரி எஞ் செல்லப் பேத்தி பேரு ஆயாகர்ருவா? ஏண்டா, இவளுக்கு ஒரு வருசங்கூட முடில. அதுக்குள்ள எம் பேத்திய ஆயா ஆக்கிட்டீங்களா?
நல்ல இருக்குதடா இந்தக் கதை. எல்லாம் தசு புசு, அந்த கா இந்தக் கா-ன்னு பேரு வைக்கறாங்க. நீ என்னடானா ஆயாகர்ருன்னு பேரு வச்சுட்ட.
😊😊😊😊😊
பாட்டிம்மா, நான் பணியற்றுகிற வருமான வரித்துறை மேல நான் என் உயிரையே வச்சிருக்கறேன். அதனாலதான் பாப்பா பேரு ஆயாகர். போதுமா பாட்டிம்மா?
😊😊😊😊
போதுமடா சாமி. ஊரோட ஒத்துப்போறதுதான் நல்லது.
😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊
●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●●● சிரிக்க. அல்ல. சிந்திக்க.


Close (X)

5 (5)
  

சிறந்த நகைச்சுவைகள்

மேலே