அந்த பாகவதர் என் இப்படி பாடினார் நகைச்சுவை

பாலா பாகவதர் ரொம்ப சுமாராகத் தான் பாடக் கூடியவர். அவருக்கு அதிகமா பாட சான்ஸ்
கிடைப்பதில்லை. திடீரென்று ஒரு நாள் அவருக்கு ஒரு சபாவில் சாயங்காலம் பாட சபா அழைப்பு
வந்தது.

மிகவும் சந்தோஷப பட்ட பாலா பாகவதர் தனக்கு தெரிஞ்ச ஒரு மிருதங்க வித்வானையும்
வயலின் வித்வானையும் குறிப்பிட்ட தினத்துக்கு வரும்படி கேட்டுக் கொண்டார்.சபாவில் கொடுக்கும்
பணத்தில் இந்த இரண்டு வித்வானுக்கும் சுமாராக கொடுத்து விட்டு மீதி பணத்தை தான் வைத்துக்
கொள்ள நினைத்தார்.ரெண்டு தெரு தள்ளி இருக்கும் அவர் மாமாவை இலவசமா தம்புவுறா
கேட்டுக் கொண்டார்.அந்த மாமாவும் 'நாம வீட்டிலே சும்மா தானே இருக்கோம். பாலா கேட்டுக்
கொண்டாப் போல அவன் கச்சேரிக்கு போய் வரலாமே' என்று நினைத்து ஒத்துக்க கொண்டார்.

அந்த கச்சேரிக்கு கிளம்புவதற்கு முன்னாள் அவர் மணைவி இடம் நல்ல ஹெவி டிபன் பண்ணி
தர சொல்லி டிபன் தயாரானதும் ஒரு ''பிடி'' பிடித்து விட்டு தம்புடாவை எடுத்துக் கொண்டு
பாட்டு கச்சேரிக்கு கிளம்பினார்.

பாட்டு கச்சேரி நடந்த சபாவில் ஏ.சி.போட்டு இருந்தார்கள்.பாலா பாகவதர். வயலின் வித்வானும்,
மிருதங்க வித்வானும். தம்புரா போட அழைத்து இருந்த மாமாவும்சரியான நேரத்திற்கு வந்து
விட்டதால் பாலா பாகவதர் சரியாக ஆறரை மணிக்கு ஆரம்பித்தார்.

ஒரு மணி நேரம் பல பாடல்களை பாடி விட்டு ஆலாபனையை தொடங்கி விடாமல் பாடிக்
கிட்டு இருந்தார். பலமான டிபன் சாப்பிட்டு வந்த மாமா முகத்திலே ஜில்லென்று ஏசி காத்து வீசவே
அவர் கண் அயர்ந்து விட்டார்.தம்பிடா மேலே தலையை சாய்த்து கிட்டு கண் அசந்து விட்டார்.

பாலா பாகவதர் தம்புரா சுத்தம் வராதத்தை கூட கவனிக்காமல் ஆலாபனை செய்து கொண்டு
இருந்தார்.ஆனால் மிருதங்கம் போடற வித்வானும், வயலின் போடற வித்வானும் தம்புரா போடற
மாமா தாபிரா மேலே படுத்து கிட்டு கண் அசந்துப் போனதை பார்த்ததும் பாலா பாகவதர் கிட்டே
வெறுமே தங்கள் தலையை தம்புரா போடும் மாமா பக்கம் பார்க்கும் படி சைகை காட்டிக் கொண்டு
இருந்தார்கள்.கச்சேரிக்கு வந்து இருந்தவர்கள் இதை கவனித்து விட்டு மெல்ல சிரிக்க
ஆரம்பித்தார்கள்.

பாலா பாகவதர் ஆலாபனை பண்ணிக் கொண்டே தம்புரா சத்தமே வராததை கவனித்ததும் 'நாம
பின் பக்கம் திரும்பிப் பார்த்து மாமாவை எழுப்பினா சபையிலே கச்சேரி கேட்க வந்து இருப்பவர்கள்
கவனித்தால் நிலைமை ரொம்ப மோசம் ஆகி விடுமே' என்று நினைத்து கொஞ்ச நேரம் யோஜனை
பண்ணினார்.அவருக்கு ஒரு ஐடியா பண்ணினார்.

தான் பண்ணி வரும் ஆலாபனையை கொஞ்ச நேரம் நிறுத்தி விட்டு உரக்க ""கௌசல்யா சுப்ரஜா
ராமா பூர்வா சந்தியா ப்ரவர்த்ததே"" என்று பாட ஆரம்பித்தார்.இந்த பாட்டை கேட்ட மாமா உடனே தன
தம்புரா போடா ஆரம்பித்தார்.

கச்சேரி கேட்க வந்த அத்தனை பேரும் உரக்க சிரிக்க ஆரம்பித்தார்கள்.

கூடவே பாலா பாகவதரின் சமயோஜித புத்தியை பாராட்டினார்கள்.

எழுதியவர் : ஜெ சங்கரன் (11-Sep-17, 1:33 pm)
சேர்த்தது : Sankaran
பார்வை : 217
மேலே