இரண்டு பூனைகளும் பின்னே நானும்

வெள்ளிக்கிழமை கடையில் சாப்பாடு வித் சிக்கன் வாங்கி ரூம்க்கு கொண்டு வந்து சாப்பிட்டேன்.
அப்பொழுது சிக்கன் வாசனை நுகர்ந்து இரண்டு பூனைகள் வந்து நான் சாப்பிடுவதை பார்த்து எச்சில் கொட்டியவாறு குறுகுறுவென பார்த்து கொண்டிருந்தது.
சரினு நானும் கொஞ்சம் சிக்கனும் எலும்பும் போட்டேன்.அது இரண்டும் சண்டை போட்டு கொண்டு எல்லாவற்றையும் சாப்பிட்டு ஏப்பம் விட்டுட்டு போயிருச்சு..

இன்று மதியம் சிக்கன் மசாலாவை முட்டை குழம்பில் போட்டு சாப்பிட ஆயுத்தமான போது,மீண்டும் அதே இரண்டு பூனை மோப்பம் பிடித்து கொண்டு நேற்று சிக்கன் சாப்பிட்ட நினைப்புல வந்து பவ்யமாய் நின்றது.
நானும் சாப்பிட்டு முடிச்சு எழுந்து போனேன்.
அதுகளும் பின்னாடியே சந்தோசத்தில் எக்காளமிட்டவாறு ஓடி வந்தது.
கை கழுவி விட்டு திரும்பி பார்த்தேன்.
இரண்டு பூனையும் இஞ்சி தின்ற குரங்கு மாதிரி என்னையே பார்த்து முறைச்சிட்டு கத்திட்டு போயிருச்சு..

ஒருவேளை நமக்கு கொடுக்காம சிக்கனோடு சேர்த்து எலும்பையும் சேர்த்து தின்னுட்டானோனு நினைச்சுச்சா இல்லை,
நாம இருப்பதால் சிக்கன் குழம்பை மட்டும் சாப்பிட்டு கறியைலாம் எடுத்து ஒழிச்சு வைச்சுக்கிட்டான்னு நினைச்சுச்சானு தெரியலை..
யாராச்சும் அந்த பூனையைகளை பார்த்தால் நான் இன்னைக்கு முட்டை குழம்புதான் சாப்பிட்டேன்னு சொல்லிருங்கப்பா..
அப்படி அந்த பூனைங்க நான் சிக்கன்தான் சாப்பிட்டேன்னு தப்பா நினைச்சுக்கிட்டா நாளை பின்னை அதுங்க முகத்துல எப்படி முழிப்பேன்..

பீலிங் குற்ற உணர்ச்சி அவ்வ்வ்வ்.

எழுதியவர் : சையது சேக் (11-Sep-17, 5:15 pm)
சேர்த்தது : சையது சேக்
பார்வை : 554

சிறந்த நகைச்சுவைகள்

மேலே