தலைவர் தேர்தல்
என்னய்யா, உங்க கட்சித் தலைவர் தேர்தல கோட்டை மைதானதத்தில நடத்தறீங்களாம்.
😊😊😊😊😊
ஆமாய்யா. கோட்டை மைதானத்துக்குச் சரியா மாலை அஞ்சு மணிக்கு எங்க கட்சில உள்ள பத்தாயிரம் பேரும் வந்திருவாங்க. மேடை போடமாட்டோம்.
😊😊😊😊😊
சரி. எப்பிடி தலைவரைத் தேர்ந்தெடுப்பீங்க. உங்க கட்சியோட பேரு என்ன?
😊😊😊😊
எங்க கட்சிப் பேரின் சுருக்கம் கூ.ப.ர.க
😊😊😊😊
வெளக்கமாச் சொல்லுய்யா.
😊😊😊😊😊
கட்சிப் பேரத் தேர்தல் ஆணையத்தில பதிவு செய்யறவரைக்கும் அந்தச் சுருக்கப் பெயரைத்தான் பயன்படுத்துவோம்.
😊😊😊😊😊
சரி தலைவர் தேர்தலைப்பத்திச் சொல்லுய்யா.
😊😊😊😊
நாங்க பத்தாயிரம் பேரும் கூடினதும் கூட்டத்தின் நடுவில ஒரு ஏணிப்படி வச்ச பத்தடி உயர நாற்காலியை வைப்போம். அந்த நாற்காலி மேல ஒரு அஞ்சு வயசு பெண் குழந்தையை நிக்கவைப்போம். அந்தப் பாப்பா கூட்டத்தை பலமுறை சத்திப்பாக்கும். கூட்டத்தில யாரு ரொம்ப உயரமா, பரங்கிக்காய் அளவுக்கு பெரிய தலையோட நல்ல பழுத்த பழம் போல பெருத்த கன்னம் உள்ளவரோ அவரச் சுட்டிக்காட்டும். அவர்தான் அஞ்சு ஆண்டுகளுக்கு எங்க கட்சித் தலைவரா இருக்க முடியும்.
😊😊😊😊😊
அடேங்கப்பா. புதுமையான தேர்தல் அய்யா. கண்டிப்பா இது கின்னஸ் சாதனை ஆகப்போகுது. அப்ப, தலைவரா இருக்கணும்னா ரொம்ப உயரமா இருக்கணும், பரங்கிக்காய் தலை, பருத்து பெருத்த பழுத்த கன்னங்கள்.
😊😊😊😊😊
ஆமாய்யா. இதுதான் புதுமை. ஒளிவு மறைவு இல்லாத தேர்தல். லஞ்சம் கிடையாது.
😊😊😊😊😊
தலைவர்ன்னா பெரிய தலையா இருக்கவருதாய்யா தலைவர்.
■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆◆●◆◆◆◆◆●◆◆◆◆◆◆◆