உன்னருகே நான் இருந்தால்

கடும்புயலும் கம்பளிக்குள் அடங்கும்
உன்னருகே நான் இருந்தால்,..................
இமைகள்கூட இமைக்க மறுக்கும்
உன்னருகே நான் இருந்தால்,...............
பேசும் வார்த்தைகள்கூட ஊமையாகும்
உன்னருகே நான் இருந்தால்,...................
வருடங்கள் நிமிடங்களாகும்
உன்னருகே நான் இருந்தால்,................
காணும் காட்சிகள் பதிவுகளாகும்
உன்னருகே நான் இருந்தால்,.................
சுடும் தீயும் சுகமாய் தீண்டிடும்
உன்னருகே நான் இருந்தால்,................
ஒரு வரிக்கு ஓராயிரம் அர்த்தங்கள்
உன்னருகே நான் இருந்தால்,...................
ஒரு நொடிக்குள் ஒரு கோடி புரிதல்கள்
உன்னருகே நான் இருந்தால்,................
எனக்குள் ஒரு வேதியியல் மாற்றம்
உன்னருகே நான் இருந்தால்,..............
தாய்மையும் தனிமையும் ஒரே நேரத்தில்
உன்னருகே நான் இருந்தால்,...............
இதோ கிடைத்துவிட்டது என் ஏழேழு ஜென்மங்கள்
உன்னருகே நான் இருந்தால்,...................................
-ஸ்ரீஜே