தமிழ் காதல்

உன்னை பிடித்தாலோ ஏனோ
தமிழ்மீதும் ஒரு பிடிப்பு,
உன்மீது வந்ததாலோ ஏனோ
தமிழ்மீதும் ஒரு ஈர்ப்பு,
உன்னை அறிய ஆவல் கொண்டதாலோ ஏனோ
தமிழை அறியவும் ஆவல்,
தமிழே நீ ஒப்பானாய் என் தமிழுக்கு,
அதனால்தான் எனக்கு வந்தது
தமிழே உன்மீது ஒப்பில்லா
தமிழ்க்காதல்.

எழுதியவர் : ஸ்ரீஜே (6-Sep-17, 3:43 pm)
சேர்த்தது : ஸ்ரீஜே
Tanglish : thamizh kaadhal
பார்வை : 89

மேலே