லைலாவின் மஜ்னூன்
ஆயிரம் மஜ்னூன்கள் இங்குன்டு,
ஒரு காயிஸையும் கண்டதில்லை லைலாவின் காதலனை போல..
காதலெனும் வானத்தில் லைலாவே பௌர்ணமி நிலவாய் வீற்றுருக்கிறாள்,
மஜ்னூனோ லைலாவின் நினைவில் சிதறி நட்சத்திரமாய் அவளையே சூழ்ந்து கிடக்கிறான்.
லைலாக்கள் எப்போதுமே பேரழகியாகவே இருக்கிறார்கள்,
எல்லோருமே காயஸின் விழி வழியே ரசிப்பதினாலோ..
மரக்கிளையில் பொதிந்த உறை பனிகளெல்லாம்,
காற்றூனூடே சிக்குன்டு பிசிறு தெறிப்பது போலவே,
லைலாவை பிரிந்த துயரங்களால் உயிரின் ஒவ்வொரு படிநிலையும் உதிர்ந்தே உயிர் நீத்தானென்பது லைலாவும் அறிந்திருக்க மாட்டாள்.
ஓ! லைலாவே,
உன் பேரன்பின் காதலன்
பாலை நிலத்திலும் வனாந்திரத்திலும் உன்னையே தேடி தேடி பித்து பிடித்தவன் போலானதெல்லாம் உன் மேனி சேர அல்லவே..
உன் கல்லறையில் வீழ்ந்து மோட்சம் அடையவே.!
லைலாவை பார்த்த கனப்பொழுதில் இங்கு பல மஜ்னூன்கள் பிதற்றியபடி திரிகிறார்கள்..
பாவம் லைலாக்கள் விரும்பியது கயாஸை மட்டுமே..
தேவையற்ற ஒன்று தன்னிடம் இருப்பதன் வலியும்,
தேவையான ஒன்று தன்னிடம் இல்லாத வலியையும் உணர்ந்தவர்களே இந்த மஜ்னூன்கள்.