மனைவியதிகாரம் 2
நான் பேசி களைப்படைந்து பேச்சிழந்து நிற்கும் தருணத்தில்,
பொய்யாய் ஒரு கோபம் கொள்கிறாள்..
சமாதனப்படுத்துவதற்காகவே மீண்டும் பேச்சை ஆரம்பிக்கிறேன்..
அடுத்து களைப்படையும் வரை எனது வார்த்தைகளை ரசித்து கொண்டிருப்பாள்..
பொய் கோபத்தை விழுங்கியபடி..