அன்பின் பைத்தியங்கள்

எனக்குள் ஒரு பைத்தியம் உண்டு..
அது அதுக்கு பிடித்ததை பிடித்து கொண்டு கொண்டாடும் பைத்தியம்.
அதுக்கு பிடித்ததில் மையலிட்டு கிடப்பதால்,
பிறரின் பைத்திய தன்மை கூட ரசனையாகவே மாறி விடுகிறது,
மாற்றத்திற்குள்ளாகாத அந்த பைத்தியதிற்கு.
பைத்தியத்தனத்தை தெளிய வைக்கவே,
சிலர் எனக்குள் இருக்கும் பைத்தியத்தை நிர்கதியாக்கி விட்டு செல்கின்றனர்..

அன்பின் பைத்தியங்களுக்கு தெரிவதில்லை,
நீ கொண்டாடியது அந்த பைத்தியதன்மையையல்ல..
பைத்தியதன்மையாக காட்டிக் கொண்ட மனித பைத்தியங்களையென்று..

எழுதியவர் : சையது சேக் (6-Sep-17, 4:11 pm)
சேர்த்தது : சையது சேக்
பார்வை : 151

மேலே