மீளும் வெற்றி
நிசப்தத்தை
தின்று தீர்க்க
நினைத்தது
சப்தம்
மீண்டது நிசப்தம்!!!
ஒளியை
இரையாக்க நினைத்தது
இருட்டு
மீண்டது ஒளி!!!
சவரத்தின் இறுதியிலும்
முடிகள்!!!
புதைத்த விந்தையிலும்
விருட்சங்கள்!!!
இதுதான் நம்பிக்கை!!!!
தடுத்தாலும் மீளும்!!!!
விடுத்தாலும் வாழும்!!!
தோல்விகளால்
வெற்றியின் முழுமையை
விழுங்கிவிட முடியாது
மீளும் வெற்றி!!!!!