காதலில் தோல்வி
தாய் தந்தையருக்கு தெரியாது
உடன் பிறந்தாரும் ஒன்றும் அறியார்
நான் அவன்தான் என்னவன் என்று
அந்த அவனை மனதில் வ்ரித்தேன்
அவன்மேல் மோகம் கொண்டு
அவனை காதலித்தேன் பித்தானேன்
அவன்தான் இனி என் உலகம் என்று
எண்ணி உறவெல்லாம் உதறிவிட்டு
அவனோடு ஓடிவிட்டேன் காதல்
மயக்கத்தில் அவன் சொல்லெல்லாம்
சத்திய வாக்கென்று எண்ணி அவனிடம்
என்னை கொடுத்தேன் என்னையே
தந்தபின்தான் அறிந்தேன் அவன்
விரும்பியது என் உடலைத்தான் நான்
என்னுடன் கொண்டுவந்த பொருளைத்தான்
என்று - இப்போது என்னையும் அனுபவித்து
என் பொருளெல்லாம் அபகரித்து என்னை
தனிமையில் தவிக்கவிட்டு ஓடிவிட்டான்
ஒரு திருடனைப்போல் -இனி நான்
என்ன செய்வேன் என் காதல் உண்மைக்காதல்
ஆனால் அவன் என்மீதுவைத்த காதல்
காதல் அல்ல வெறும் மோகம் என்று இப்போது
தெளிந்தேன் என் செய்வேன்
கண்கெட்டபின் சூரிய நமஸ்காரமா என்று
என்னையே கேட்டு நிற்கின்றேன்
ஒரு இடி தாக்கி பழுதான பனை போல்
பெண்களே என் கதைக்கேட்டு கண்ணீர்
விடவேண்டாம் ஆனால் நீங்களும்
காதலுக்கு வயப்பட்டால் அது காதல்
வலை அல்ல என்று அறிந்திடல் வேண்டும்
காதல் தவறல்ல காதலிப்பது தவறல்ல
ஆனால் அது மாசிலா உண்மைக் காதலா
என்றறிந்தால் காதலில் சுகம் உண்டு
இதம் உண்டு
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
