காதல்

'
குருவின் பாதத்தை
இறுக பற்றி,
ஞானியாக மார்கம்
கற்றறியலாம்; ஆனால்
காதல் செய்ய எந்த
குருவை நாடி போவாய் ?
அது தானாக உன்னை
வந்தடையும் கால நேரம்
சரியாக வந்தமைந்தால்
சொல்லித் தெரிவதில்லை
மன்மத லீலை என்று
இதனால்தான் சொல்லி
சென்றாரோ ஆன்றோரும் ?

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (7-Sep-17, 2:43 pm)
Tanglish : kaadhal
பார்வை : 95

மேலே