அனிதா கேட்ட கடைசிக் கேள்வி

“நான் தோற்றுப் போயிட்டேனா?” - அனிதா கேட்ட கடைசிக் கேள்வி
தோற்று போனது நீ இல்லை அம்மா ...
உன்னை காப்பாற்ற திறன் அற்ற நாங்கள் தான் ....
சற்று முன் ஆனந்த விகடனில் படித்தேன். இனம் புரியாத வலி இதயத்தில் ஊடுருவிட்டது .
நம் கல்வி கொள்கை மேல் கோவம் கோவமாக வருகிறது...

அனிதாவை எரித்த நெருப்பு இந்த
கல்வி கொள்கையை எரிக்க வேண்டும் ...
கடவுள் இருக்கிறாரா இல்லையா
நிச்சயமாய் எனக்கு தெரியாது...
ஆனால் , நம்மை மீறிய
ஒரு சக்தி நிச்சயம் உண்டு என்று
எனக்கு தெரியும்..
மரித்தவர்களுக்கு உயிர் கொடுக்க
முடியும் என்றால் ,
தயவு செய்து,
அனிதாவின் மரணம் ,
எங்கள் தூக்க கனவாய் மாறட்டும் ,
அனிதாவை திருப்பி தா ...
எங்களுக்கா அல்ல..
அவளை இழந்து தவிக்கும்
அவள் உறவுக்கா...

எழுதியவர் : (7-Sep-17, 3:14 pm)
சேர்த்தது : சுபா பிரபு
பார்வை : 219

மேலே