நிஜத்தில் நீ

ஒரு தாழ்வாரத்து
மூலையில்!

கசங்கிய கண்டாங்கியோடு
கயித்து கட்டிலில்
கண்மூடி கிடக்கிறேன்!!

ஒரு திருவிழா தினத்தில்
திருட்டுத் தனமாய்
நீ வாங்கி தந்த
பல்லாங்குழி- இப்போது
தலையணையாய்!!
செரிக்க முடியா உன்
நினைவுகளில்!!
முழங்காலுக்கும் மேலே
மிதிவண்டி பழகிய
காயங்களும்
நீ மண்போட்டு
மருத்துவ நிமிஷங்களுக்கு
தழும்புகளாய்!!!

ஒரு குளிர்காலத்து
காலையில் நீ
போன நாளில் இருந்து
இந்த தாய்ப்பறவை
பிணிப்பறவை ஆனது!!

எப்போது அழைப்பீர்
என்னவரே-ஆண்ட்ரே
எனக்கு காதலர் தினம்!!

-மூதாட்டி,

எழுதியவர் : ஸ்ரீஜே (7-Sep-17, 3:48 pm)
Tanglish : nijaththil nee
பார்வை : 104

மேலே